Breaking News :

Tuesday, May 21
.

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.


அருள்மிகு ஸ்ரீ யதிராஜநாதவல்லி உடனுறை ஸ்ரீ அதிகேசவப் பெருமாள் திருக்கோவில்

தீர்த்தம் : அனந்தசரஸ்.

புராணப் பெயர் : பூதகிரி.

மூலவர் ஆதிகேசவ பெருமாளின் திருமாராபில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும் பூதேவியும் குடியிருக்கின்றனர்.

அடுத்து தாயார் யதிராஜநாதவல்லி தாயாரின் சன்னதி.

கோவிலை விட்டு வெளியே வந்தால்  எதிரே இராமனுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம்.

ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள்.

ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது.

பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக பெயர் மாறியது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.