Breaking News :

Saturday, March 02
.

"இந்த மரணம் என்னை என்ன செய்யும்"?


மிருகண்டர் என்பவர் ஒரு மகரிஷி. அவருடைய மனைவி #மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச் செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார்கள். ஒருநாள் மகரிஷி முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழும் #முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா? அல்லது பதினாறு வருடங்களே வாழப்போகும் #புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறிமறைந்தார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான் அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான், வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.

அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான். அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார்!......

நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய்! இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி கண்ணீருடன் கூறினார்.

உடனே மார்கண்டேயன் "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது நீங்காத #அன்பு உண்டு, அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள்! அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.

தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான்.

கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான #எமன் ஒரு எருமையின் மீது ஏறி அங்கு வந்து, மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக் கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.

சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார்! அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது பாசக்கயிறு சிவலிங்கத்தில் பட்டு அந்த சிவலிங்கம் வெடித்தது! அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறி எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான் "எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! இவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் என்றும் 16 வயது முடியாத #சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.

எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். அந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "#இந்த_மரணம்_என்னை_என்னசெய்யும்" என முடியும்.

இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்.

நன்றி: அன்புவேல்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.