Breaking News :

Tuesday, May 07
.

செங்காநத்தம் மலை காலபைரவர் கோவில், வேலூர்.


இங்கு எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால பூஜை நடக்கிறது அந்த நாட்களில் மட்டும் இங்கே கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வருகிறார்கள். மற்ற நாட்களில் அமானுஷ்யமான நிசப்தத்தில் காட்சியளிக்கிறார் பைரவர். அங்கே  சென்றால் இதை உணரலாம்.

கோயிலுக்கு வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 3ஏ செங்காநத்தம் பஸ்ஸில் பயணிக்கலாம். மேலும் இங்கே கடினமானபழைய காலத்து நடைபாதையும், புதிய தார்ச்சாலை உள்ளது எளிதாக பயணிக்க.

 

இது 500 வருடம் பழமையான கோவிலாகும்

 

. இந்த கோவிலில் உள்ள பைரவர் சுயம்புவாக கிடைத்த சிலையாகும்.

 

அந்த வடிவங்களில் சாந்தமான அருள் சுரக்கும் வடிவமும், உக்கிர வடிவமும் பக்தா்களின் மத்தியில் பிரபலமானவை. உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும். அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவன் எடுத்த அவதாரங்களில் ஒன்று தான் காலபைரவா் அவதாரம்.

 

வேலூரை அடுத்த செங்காநத்தம் மலையில் உள்ள காலபைரவர் காசிக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி பிரவேசித்து, பத்து கைகளுடன் விளங்குகிறாா்.

 

இதுபற்றி கோவில் நிா்வாகிகள் கூறியதாவது:- சுயம்புவாக வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை அடுத்துள்ள செங்காநத்தம் மலையில் இயற்கை சூழலில் காலபைரவர் கோவில் உள்ளது. இது 500 வருடம் பழமையான கோவிலாகும். முன்னோா்கள் காலத்தில் நிலத்தை செம்மைப்படுத்தும்போது சுயம்புவாக கிடைத்த சிலையாகும்.

அப்போது விஜயநகர பேரரசின் சந்திரகிாி மண்டலத்தின் ஒரு பகுதி தான் வேலூா். அதன் வடகிழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நோக்கி இருக்கும் வகையில்இருக்கும் வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை நிறுவியவா் விஜய நகர ஆட்சியாளா்கள்.

 

காலபைரவரை செங்காநத்தம் ஊரை சோ்ந்த தர்மகர்த்தாக்கள் கேசவலு நாயுடு, நரசிம்மலு நாயுடு, பக்தவச்சலம் என ஒரு குடும்பம் வழிவழியாக பூஜைகள் செய்து பராமாித்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறாா்.

கால பைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கம்பீரத்துடன் காட்சியளித்துள்ளது. தானாகவே இந்த பைரவா் சிலைக்கு பின்னால் அழிஞ்சில் மரம் உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளதுமரத்தின் அடியில் பத்து கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றாா். அத்துடன் தனது வாகனமான நாய்களுடன் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.

 

வேண்டுதல் முதலில் காலபைரவா் சிலையில் ஒரு கண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதை ஒரு சிற்பியை வைத்து சரி செய்தபோது திடீரென அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளபாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காலபைரவா் கோவிலுக்கு அடிக்கடி வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்து

வழிபட்டதை தொடர்ந்து சிற்பி பழைய நிலைக்கு திரும்பினார்.

 

ஒரு செல்வந்தா் தன்னுடைய 3 மகளுக்கும் திருமணமாகாமல் வயதாகி கொண்டு செல்கிறது என வருந்தியபோது அவரது கனவில் காலபைரவா் தோன்றியதாகவும்,பின்னா் அந்த பக்தா் கோவிலுக்கு தினசாி வந்து காலபைரவரை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் 3 மகள்களுக்கும் நல்ல வரன் கிடைத்துதிருமணமானதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் ஒவ்வொரு மகள் திருமணத்தின் போதும் ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினாா் என்றுகூறப்படுகிறது.

 

இயற்கையாக கிடைக்கும் திருநீறு 

இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது.பைரவரை தாிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.

 

இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில்  அபிஷேகம் செய்து பல்வேறு நறுமண மலா்களால் அலங்காிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சித்திரை திருநாளில் கோவிலில் திருவிழாக்கள் சித்திரை திருநாளில் கோவிலில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடக்கிறது. பெண்கள் பொங்கலிட்டும் , வீட்டில் இருந்து நோ்த்திகடனாக நெய்வேத்தியம் செய்தும் படைக்கி

பொங்கலிட்டு கோழி, ஆடு பலியிடுவதற்கு முன்பு காலபைரவரின் தலை மீது மல்லிகை மற்றும் பல்வேறு வகையான பூக்களால் பூச்சரம் கட்டப்பட்டு அதன் மீது எலுமிச்சை பழம்வைக்கப்படும். அந்தப் பழம் தானாகவே அருகில் நின்றிருக்கும் ஊர் நாட்டாமை கையில் விழும். அப்போது தான் கோழி, ஆடுகளை பலியிட காலபைரவர் சம்மதித்ததாககருதப்பட்டு அதன் பின்னர் பொங்கலிட்டு ஆடு பலியிடுவது நடக்கிறது.

 

சனிக்கிழமையன்று காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா் தான் குரு.இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும்.இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 ராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.

 

வழிபடும் முறைகள்

 திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டுதல் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி சாமி அருகே உள்ள பழைமையான மரத்தில் மஞ்சள்கயிறு மற்றும் தொட்டில் கட்டி பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா். அதுபோக கோவில் முன்பு பக்தா்கள் எலுமிச்சை விளக்கு,அகல் விளக்கு, பூசணியில் திாி விளக்கு மற்றும் மிளகில் திாியிட்டு விளக்கேற்றி வழிபடுகின்றனா். இதனால் பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

ஒரு சில பக்தா்கள் பணக்கஷ்டம் நீங்கவும் மற்றும் இழந்த செல்வத்தை மீட்டெடுக்கவும் 108 ஒரு ரூபாய் நாணயம் மூலம் அபிஷேகம் செய்வதன்மூலம் பயன் பெறலாம். இடப்பிரச்சினை தீர தேங்காய் திரி விளக்கு ஏற்றலாம். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய மிளகு தீபம் ஏற்றலாம்.

 

உக்கிரமானவர் காலபைரவரை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கே கட்டப்பட்டுள்ள மணியை அடித்து ஓசை எழுப்பும் போது எங்கிருந்தோ வரும் நாய்கள் வடக்கு நோக்கி வரிசையாக அமர்ந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு பக்தர்களோடு பக்தராக பைரவரை வணங்குகின்றன.மணியோசை நின்றவுடன் நாய்கள் வந்த வழியே சென்று விடுகின்றன. இதேபோல் ஒவ்வொரு அஷ்டமி பூஜையின் போதும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு கால பூஜையின் போது நாய்கள் ஒன்று சேர்ந்து மூலவர் முன்பு வந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு வணங்குகின்றன. காலபைரவர் உக்கிரமான தெய்வம்என்பதால் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். பெண்கள் பைரவர் பாதங்களை தொட்டு வணங்கக்கூடாது.

 

வெளி மாவட்ட பக்தர்கள் 

பல்வேறு பிரச்சினைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரியான உடன் மன நிம்மதியுடன் அவர்களின் நேர்த்தி கடன்களை காலபைரவருக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். அந்த வகையில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காலபைரவரை தாிசிக்க வருகின்றனர். மேலும் திருச்சி, சென்னை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரு சில பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோழி, ஆடுகளை பலியிடுகின்றனர். இந்த கோவிலில் அன்னதானம், சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத்திற்கான உதவிகளை ரங்காபுரம் லட்சுமி ஸ்டீல் உாிமையாளா் ஆா்.மணி செய்து வருகிறாா்.

 

மேலும் சில பக்தர்களும் காலபைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் அன்னதானம் வழங்கும் பொறுப்பை செய்து வருகின்றனா்.

கோவில் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வராஜ் யாதவ், ராகவன் நாயுடு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


 

வேலூர் சத்துவாச்சாரி மலைத்தொடரின் பின் பகுதியில் உள்ளது செங்காநத்தம் மலைப்பகுதி,பச்சை நிற போர்வை போர்த்தியவாறு மரங்கள்,வளைந்து, நெளிந்து செல்லும் தார் சாலையுடன் “வேலூரின் ஊட்டி” என அழைக்கப்படுகிறது இந்த சிறிய மலை கிராமம்.வேலூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்காபுரம் அருகே வலதுபுறமாக செல்லும் பாதையை கடந்தால் செங்காநத்தம் மலையை 20 நிமிடத்தில் அடையலாம்.

மலை உச்சிக்கு சென்ற பின் வலது புறம் பிரியும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் ஊரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

மேற்கூரை ஏதுமின்றி பிரம்மாண்டமான மரமே ஆலயத்தின் கூறையாகவும், மண்டபம் போன்ற இயற்கை அமைப்பில் உள்ளது. இதன் உள்ளே சிறிய 10x10 சுற்றுசுவர்,உள்ளே  எழுந்தருளியுள்ள பைரவர் பத்து கரங்களுடன், ராகு கேதுவை முப்புரிநூலாக அணிந்து இருக்கும் இவர், மழு ,பாசம், தண்டம், ஏந்தி நாய் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இச்சிலைக்கு அருகில் அவரது வாகனமாக கருதப்படும் ஏழு நாய் சிலைகள் உள்ளன.

இந்த பகுதி மலைகளிலிருந்து சுனைகளில் நீர்வரத்தும் விவசாயத்திற்கும் கால்நடைகள் மேய்க்க ஏற்ற இடமாக இருப்பதாலும் அவ்வாறே கிராமத்தில் ஆடு மாடுகள் மேய்க்க செல்பவர்கள் தங்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்து நேராமல் இருக்க ஊரைக் காக்கும் கடவுளாக பைரவரை காலகாலமாக வழிபட்டு வந்துள்ளனர். எல்லோரும் 500,1000 என பல்வேறு வருடங்களை கூறுகிறார்கள். இங்குள்ள பைரவர் கோயில் பற்றியும் வரலாறு பற்றியும் முழுவதுமாக தகவல்கள் தெரிந்தவர்கள் ஊரில் யாரும் இல்லை.

 

இங்கு எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால பூஜை நடக்கிறது அந்த நாட்களில் மட்டும் இங்கே கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வருகிறார்கள். மற்ற நாட்களில் அமானுஷ்யமான நிசப்தத்தில் காட்சியளிக்கிறார் பைரவர். அங்கே  சென்றால் இதை உணரலாம்.

கோயிலுக்கு வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 3ஏ செங்காநத்தம் பஸ்ஸில் பயணிக்கலாம். மேலும் இங்கே கடினமானபழைய காலத்து நடைபாதையும், புதிய தார்ச்சாலை உள்ளது எளிதாக பயணிக்க


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.