Breaking News :

Sunday, September 15
.

சனி மகாபிரதோஷம் வழிபாட்டு பலன்கள்


சனி மகாபிரதோஷம் என்று போற்றப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் வழிபட்டால் வக்ர சனியின் தொல்லைகள் தீரும் என்பார்கள். எந்த ராசிக்காரர்கள் நாளை கட்டாயம் வழிபாடு செய்வது நல்லது? எப்படி வழிபட்டால் நல்லருள் கிடைக்கும் என்பன குறித்துக் காண்போம்.

திதிகள் ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்புகள் உண்டு. அவற்றில் திரயோதசி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திரயோதசி திதி நாளையே பிரதோஷ தினமாகச் சொல்கிறோம்.

 

காரணம் அந்தத் திதியின் பிரதோஷ வேளை (மாலை 4.30 - 6.00) மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களில் வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் தீர்ந்து இன்பம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த பிரதோஷ தினங்கள் சனிக்கிழமைகளில் வந்தால் மிகவும் சிறப்பு. அதை சனி மகாபிரதோஷம் என்று கூறுவார்கள். அதாவது பிரதோஷங்களுக்கு எல்லாம் தலைவன் என்று போற்றப்படுவது சிவபெருமான் பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை உண்டு, தேவர்களைக் காப்பாற்றியது சனிக்கிழமை என்பதால், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம், 'சனி மகா பிரதோஷம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. சனிபிரதோஷம். இந்த நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும்.

 

பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும். சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி நடப்பவர்களையும் அஷ்டம சனி நடப்பவர்களையும் கண்டக சனி நடப்பவர்களையும் அர்த்திராஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும். தற்போது சனிபகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 16- ம் தேதியே வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இந்தக் காலகட்டத்தில் அனைத்து ராசிக்காரர்களும் சனிக்கிழமைகளில் ஆலயம் தொழுவது நல்லது.

 

எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும். கடந்த சில மாதங்களாகக் காரியத்தடை, சுபகாரியங்கள் தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (17.8.24) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் கடகம், கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது.

 

நாளை மாலை பிரதோஷவேளையில் அருகிலிருக்கும் சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவன், பார்வதி நந்தி தேவருக்கு செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். சிவபுராண பாராயணம் செய்வது துன்பம் தீர்க்கும் அருமருந்தாகும்.

 

சிறப்புப் பரிகாரம்

 

சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானின் தொல்லைகள் தீரும். நந்தி குருவடிவானவர். சிவபெருமான் நந்திக்கு உபதேசம் செய்தார். நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே இந்த உலகத்தில் முக்தி அடைய விரும்பும் ஆன்மாக்கள் நந்தியை வழிபட வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

 

சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்குப் பசும்பால் வாங்கித் தந்து வழிபடுவது சிறப்பு. நந்திக்குப் பஞ்சாமிருதம் செய்யப் பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நம் வறுமை நீங்கி செல்வ வளம் சேரும். நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும். இளநீர் சமர்பித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்லெண்ணையில் விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கி சுகமான வாழ்வு கிடைக்கும். ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானமாகக் கொடுப்பதன் மூலம் கடன் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடையலாம். குறைந்தபட்சம் சில வில்வ இலைகளையாவது நந்திக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் போதும். நந்தி உங்களின் வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேற அருள்புரிவார்.

 

விஷ்ணுபதி புண்ணியகாலம்

 

நாளை ஆவணி மாதப் பிறப்பு. இந்த நாளில் காலை 10:30 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். ஏகாதசிக்கு இணையான இந்தப் புண்ணியகாலத்தில் விஷ்ணுவை வழிபாடு மிகவும் பலன் அளிக்கக் கூடியது. எனவே இயன்றவர்கள் காலை பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாத்தி வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும். வாழ்வில் சந்தோஷம் பிறக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.

 

வழிபடும் முறை :

 

சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களு ம் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிற ந்தது.

 

விரத முறை :

 

வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங் களிலும் வரும் திரயோதசி திதியன்று காலை யில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.

 

பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத் தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திரு முறை பாராயணத்தையும் மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசை யையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.

 

பிரதோஷ பலன்கள் :

 

பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடு வதால் சுபமங்கலம், நல்லெண்ணம் நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். 

பிரதோஷ தின பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோ ஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

 

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக் கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெ றும். வறுமை நீங்கி செல்வம் பெருகும் மேலும்  தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனை கள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். 

 

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களு ம் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத் தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கி ன்றன.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிர தோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும்.

 

சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்

 

அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக் கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவி ப்பது நற்பலன்களை தரும். 

 

இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், நேர்மையாகவும் உள்ளப்பூர்வ மாக சிவபெருமானை வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள். உங்கள் வீட்டில் இறை அருள் நிலைக்கட்டும்.

ஓம் நமசிவாய....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.