Breaking News :

Sunday, September 08
.

சோதித்து சாதிக்க வைக்கும் சனி பகவான்!


வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவு தான் ஆடம்பரத்தில் இருந்தாலும், அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர். மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார்.

மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் ஒரு நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கு காரணம் 
சனி பகவானிடம் இருந்து யாராலும் தப்ப முடியாது. அவரின் தீர்ப்பு தர்ம நெறிக்கு உட்பட்டதாக தான் இருக்கும்.

ஆனால் பெரும்பாலும் மக்கள் இவரை தண்டிக்கும் தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் சோதனையின் மூலம் ஒருவரைப் பக்குவப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை எனலாம்.

ஒருவருக்கு சனிதிசை நடக்கும் போது, அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ, அதனை அவரிடம் இருந்து பிரித்து, அதன் மூலம் அவர் மனதைப் பக்குவப்படுத்தி பின் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.

சனீஸ்வரன் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். அதாவது சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு, இரண்டரை ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது.

ஜாதகத்தில் ஒருவரின் ராசிக்குப் பின் ராசியிலும், அவரின் ராசிக்குள்ளும் மற்றும் ஒருவரின் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.

சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் சொல்கிறோம்.

ஏழரையின் முதல் சுற்று :

மனிதன் பிறந்ததிலிருந்து அவனுடைய இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காண முடியும். சனி பகவான் இந்தக் காலக்கட்டத்தில் முழு தீவிரமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

முதல் சுற்று நடக்கும் போது, குழந்தைகளை கையாளுவதே பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள். செய்த தவற்றையே திரும்ப திரும்ப செய்து பெற்றோரின் கவலைகளில் தொடங்கி, அடிக்கடி மருத்துவ செலவு என்று முழி பிதுங்கும்.

குழந்தைப் பருவம் முதல் இளம் வயது வரையிலான இந்த சுற்றில் தான் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே கருத்து மோதல்கள், ஏட்டிக்குப் போட்டி வாதங்கள், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்சனைகள் தலையை காட்டும்.

கணவன் மனைவிக்குள் மூன்றாவது நபரால் பிரச்சனை உருவாகும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று 'வீட்டில் அடங்காத பிள்ளைகளை ஊர் அடக்கும் விதமாக" சனிபகவான் திருத்துவார். ஏழரைச் சனியின் போது பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும், அவர்கள் வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். அதுவே வாழ்க்கையை சீர் தூக்கிப் பார்த்து திருந்த வழி வகுக்கும்.

இந்த நேரத்தில் தான் பெற்றவர்களும் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையையும், நேர்மறை சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வர பழக்க வேண்டும்.

'சனி பகவான் காயத்ரி
காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்னோ மந்தப்ரசோ தயாத்"
என்னும் இந்த சனி பகவான் காயத்ரி மந்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை தினமும் சொல்ல வைத்து, சனீஸ்வரர் அருள் கிடைக்கச் செய்யலாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.