Breaking News :

Saturday, May 04
.

பாபாவின் மாறாத அருள்கரம்: சிறுகதை


வியாழன் தோறும் நம் பாபா கோயிலுக்கு தரிசனம் பெற

தவறுவதில்லை, சாய் தயா

என்ற பெயருள்ள நான் !!

 

நூற்றுக்கணக்கான பக்தர்கள்

வந்தாலும், தங்கள் தங்கள்

டூ வீலர்களை ஒரு வரிசையாக

ஒழுங்குமுறையாக Park பண்ணி

நிறுத்தும் குணம், நம் பாபாவின்

பக்தர்களுக்கே உரிய குணம் !!

 

அதனால்தான்,

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள

நம் பாபாவின் கோயில் உள்ள

தெருவில்

Parking சண்டை சச்சரவுகள்

ஏற்படுவதே இல்லை!!

 

வியாழக்கிழமையும் 

அந்தத் தெருவாசிகளின்

பிடித்த ஒரு நாளாகப் போய்விட்டது!!

 

டூ வீலர்கள், வரிசை வரிசையாக

நிறுத்தி வைப்பதில்,

ஒரே பிரச்சினை, நம் வண்டியை

சரியாக அடையாளம் கண்டு

கொள்வதுதானில்லையா ??

 

இந்த வாரம் என்னாச்சு தெரியுமா ?

 

தயாவின் ஸ்கூட்டரின் நிறம் போலவே,

அதே கம்பெனியின் ஸ்கூட்டரும்

அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது

எதேச்சையாக!!

 

மற்ற ஸ்கூட்டரின் ஓனரும்,

மதிய நேர மஹா ஆரத்தியை

தவறவிட்டுடக் கூடாதேன்னு,

தனது ஸ்கூட்டரிலேயே

வண்டி சாவியை எடுக்காமலேயே

போய் விட்டார், கோயிலுக்கு!!

 

நமது தயாவுக்கும்,

வண்டியிலிருந்து சாவியை

எடுத்துக் கொள்ளும் பழக்கமே

அமையவில்லை, ஏனோ !!

 

அந்த மற்ற ஸ்கூட்டரின் ஓனர்

ஆர்த்தியை கண்டு விட்டு

அவசரம் அவசரமாக

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செஞ்சி

கிளம்பிப் போய்ட்டார், 

தன் 🏠 வீட்டை நோக்கி!!

 

அவர் வீடு இருப்பது,

14 கிலோ மீட்டர் தொலைவில் !!

 

கொஞ்சம் வயதான, நம் தயா

ஆர்த்தியெல்லாம் கண்ணாரக்

கண்டுவிட்டு,

பார்க்கிங்கில் இருந்த

தனது ஸ்கூட்டரைப் பார்க்கிறார் !!

 

பகீர் என்கிறது, சாய் தயாவுக்கு !!

 

காரணம்,

ஸ்கூட்டரில் தொங்கவிடப்பட்டிருந்த

ஒரு பெரிய லெதர் BAG !!

 

பிரித்துப் பார்த்த சாய் தயா

ஆச்சரியத்தின் உச்சத்துக்கேப்

போய்ட்டார் !!

 

காரணம், அந்த BAGஇல்

இருந்த 40, 45 சவரன் 

எடையுள்ள தங்க நகைகள்,

வளையலகள் !!

 

"ஸ்ரீ பாபா, ஸ்ரீ பாபா !!

ஜெய் ஜெய் பாபா !!!"

என்று வாய் முணுக்கிறது !!

 

"அடடா, இந்த நகைகள் யாருடையதோ ??

ஸ்கூட்டரின் நிறம்

ஒரேமாதிரி இருந்திடுச்சி போல !!

பாவம், அந்த பாபாவின் பக்தர் !"

என்று எண்ணிக் கொண்டே,

நாலு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள

போலீஸ் ஸ்டேஷனுக்கு

போனார், தனது ஸ்கூட்டரிலேயே !!

 

போலீசார் கேட்டார், நம் சாய் தயாவை 

"இது யாருடையது என்று எப்படி

கண்டுபிடிக்கிறது, அய்யா?" என்று.

 

சாய் தயாவுக்கும்

சட்டென்று புரிபடவில்லை!!

 

அவர் தனது மனசுக்குள்ளேயே,

"பாபா, பாபா !!

உரிமையாளரை எப்படியாவது

இங்கே அனுப்ப அருள் செய்யுங்க,

பாபா !" என்றார், கண்ணீர் பெருக !!

 

அப்புறம், நம் சாய் தயாவுக்கு

பளிச் என்று ஒரு யோசனை தோன்றியது!!

 

"சார், சார்!! BAGல்ல, ஏதாவது ஒரு

ரசீது, ஒரு துண்டுச் சீட்டு

இருக்குதா, பாருங்க!" என்று சொல்லி

பையை துழாவ ஆரம்பித்தார் !!

 

உள்ளே,

நாலைந்து உதி பிரசாதப்

பொட்டலங்களுக்கு இடையே,

ஒரு GAS SUPPLY ரசீது ஒன்று

கிடைத்தது, நம் சாய் தயாவுக்கு !!

 

நல்லவேளையாக, அந்த ரசீதில்

மொபைல் போன் நம்பரும்

இருக்கவே, தயா அழைத்தார்,

ஒரிஜினல் ஓனரை !!

 

தம்பதிகளாக வந்து சேர்ந்த,

ஒரிஜினல் ஓனர்,

"பாபா, பாபா !!

காப்பாத்திட்டீங்க பாபா !!

நகைங்களைப் பத்திரமா

காப்பாத்திட்டீங்க, பாபா !!"

என்று கைகளைக் கூப்பிக் கொண்டே

கண்ணீர் பெருக்கினார்கள் !!

 

அங்கே போலீஸ் நிலையத்தில்

மாட்டியிருந்த நம் பாபாவின்

அருள் கரம் மெல்ல மெல்ல

அசைந்து,

ஆசிர்வதிப்பது போலத் தோன்றியது,

அந்த தம்பதிகளுக்கு !!


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.