பண்டைய காலங்களில் 48 நாட்கள் (ஒருமண்டலம்) விரதம் அனுஷ்டரித்து இருமுடி தாங்கி மலையேறி ஐய்யனை தரிசனம் செய்வது வழக்கம்.
இன்றைய காலகட்டத்தில் அரை மண்டலம் 24 நாட்கள் கால் மண்டலம் 12 நாட்கள் ஒருசிலர் முன்றரை நாட்களும் உச்சகட்டமாக பம்பையில் சென்று மாலை அணிந்தும் சபரிமலை செல்கிறார்கள்.
இது மிக தவறான செயலாகும்.
ஐய்யப்பசுவாமி பிரம்மச்ர்யத்தை மேற்கொண்டவர் குளிர் காலமான கார்த்திகை மார்கழி தை மாதங்களில் மாலை அணிந்து 48 தினங்கள் கடும் விரதம் இருந்து (விந்துகட்டு) சுக்கிலம் விரையம் செய்யாமல் மலை ஏறும்பொழுது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் சீராகி குண்டலின சக்தி ஏறபட்டு உடல் பலம் பெறும் ஐய்யனின் பூரண ஆசிகளும் கிடைக்கும் என்பது ஐதீகம் .
இதன் காரணமாகவே விரத தினங்களில் அசைவம் சாப்பிடக்கூடாது பெண்களை பார்க்ககூடாது புகை போதை கூடாது என முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.
உடலையும் மனதையும் அடக்கி எல்லாம் ஐய்யப்பன் செயல் என
சுவாமியே சரணம் ஐய்யப்பா என மலையேறி ஐய்யனை தரிப்பதால்
பூரண நலம் பெற்று வாழ்வார்கள்.