Breaking News :

Tuesday, June 25
.

ராமாயணம், மகாபாரதம் முக்கிய கேரக்டர்கள்?


மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் உள்ளன. இந்த கதாபாத்திரங்களுக்கு பின்னால் மூல கதையுடன் தொடர்புடையதாக ஒவ்வொரு கிளை கதைகளும் இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களும் பல்வேறு நீதிகளை கற்றுக் கொடுப்பதாக, சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். இந்த இரண்டு காவியங்களிலும் வரும் பொதுவான, அதே சமயம் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் பல உள்ளன.

மகாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் பொதுவாக வரும் முக்கியமான 10 சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை பற்றியும், அவர்களின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளை இங்கே காணலாம். இவர்களில் சிலர் கலியுகத்திலும் கடவுளாக போற்றப்படுகிறவர்களாக உள்ளனர். அதிலும் ரிஷிகள் பலரும் தெய்வ அவதாரங்களுக்கே குருவாக இருந்து நீதியை போதித்துள்ளனர்.

ராமாயணமும் மகாபாரதமும் இந்து மதத்தில் மிக முக்கியமான காவியங்களாகும். ராமாயணம், மகாபாரதம் கதைகளை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவற்றில் ராமாயணம், மகாபாரதத்திற்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்ததாகும். ராமாயணம் திரேதாயுகத்திலும், மகாபாரதம் துவாபர யுகத்திலும் நடந்ததாகும். ராமாயணத்தில் ராமராகவும், மகாபாரதத்தில் கிருஷ்ணராகவும் மகாவிஷ்ணு அவதாரம் எடுத்திருப்பார். இவை இரண்டும் நிகழ்ந்தது வேறு வேறு யுகங்களாக இருந்தாலும் சில முக்கிய கதாபாரத்திரங்கள் இரண்டு காவியங்களிலும் இடம்பெற்றிருப்பார்கள். இரண்டு கதைகளிலும் இடம்பெறும் அந்த 10 சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஜாம்பவான் :

கரடிகளின் ராஜாவான ஜாம்பவான், ராவணனால் சீதை கடத்தப்பட்ட போது அவரை மீட்பதற்காக ராமானுக்கு உதவுவதற்கு பிரம்மாவால் படைக்கப்பட்டவர் ஆவார். மகாபாரதத்திலும், காட்டுக்குள் கிருஷ்ணருடன் 18 நாட்கள் போர் புரிந்தவராக முக்கிய பங்கு வகித்திருப்பார். தான் போர் செய்வது பகவான் கிருஷ்ணருடன் என்பதை நன்கு அறிந்தும், கிருஷ்ணரை எதிர்த்தவர் ஜாம்பவான். இறுதியில் கிருஷ்ணரின் பாதங்களை சரணடைந்ததுடன், தனது மகளான ஜாம்பாவதியையும் கிருஷ்ணருக்கு மனம் முடித்து வைத்தார்.

வாயு தேவன் :

ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் மிகப் பெரிய வீரர்கள், பலசாலிகள் என போற்றப்படும் அனுமன் மற்றும் பீமனுக்கு தந்தை என போற்றப்படுபவர் வாயு தேவன் தான். பீமன், அனுமனின் மறு அவதாரம் என்றே கருதப்படுகிறார். அனுமனை பவன் புத்திரன் என அழைப்பதுண்டு. பவன் என்றால் வாயு தேவனை குறிக்கும் மற்றொரு பெயராகும். அஞ்சனைக்கு வாயு தேவன் அளித்த வராத்தால் பிறந்தவர் அனுமன் என்பதால் அவரை வாயு புத்திரர் என்றே பக்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாய தனவா :

அசுரர்களின் கடவுளாக போற்றப்படுபவர் தான் மாய தன்வா. இவரை மாயாசுரன் என்றும் அழைக்கின்றனர். ராமாயணத்தில், மீருட் என்ற நகரத்தை உருவாக்கியவராகவும், ராவணனின் மாமனாராகவும் குறிப்பிடப்படுகிறார். அதாவது, ராவணனின் மனைவியான மண்டோதரியின் தந்தை தான் மாயசுரன். மகாபாரதத்தில் யுதிஷ்டிரரின் அற்புதமான அரக்கு மாளிகையை உருவாக்கியவர் மாய தனவா தான். காண்டவ வனத்தை அழிக்கும் போது தனது உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே பாண்டவர்களுக்காக தனித்துவமான அரக்கு மாளிகையை மாய தனவா உருவாக்கினார்.

மகரிஷி பரத்வாஜர் :

மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்தியில் இருந்து வெளியேறி வனவாசம் சென்ற ராமருக்கு காட்டில் அடைக்கலம் தந்து ஆதரித்தவர் பரத்வாஜ முனிவர். அவரின் ஆசிரமத்தில் இருந்த சீடர்களுக்கும் ஸ்ரீ ராமர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது நன்கு தெரியும். அதனால் தான் தாங்கள் அளிக்கும் உபசரிப்புக்களை ஏற்காமல் செல்வதற்கு ராமரை அவர்கள் அனுமதிக்கவில்லை. இதே பரத்வாஜ முனிவர் தான் மகாபாரதத்தில், துரோணாச்சாரியாரின் தந்தையாகவும், அஷ்வத்தாமனின் தாத்தாவாகவும் குறிப்பிடப்படுகிறார்.

குபேரர் :
செல்வத்தின் அதிபதியான குபேரர், ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்படுகிறார். மகாபாரதத்தில் ராவணனின் தந்தை விஷ்ரவா மகரிஷியின் சகோதர் என சொல்லப்படுகிறார். அதாவது ராவணனின், சித்தப்பா என குறிப்பிடப்படுகிறார். அதே சமயம் ராமாயணத்தில், ராவணன், குபேரரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்ததாகவும், இதனால் குபேரர் இமயமலைக்கு சென்று அங்கு அடைக்கலம் அடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பரசுராமர் :

பரசுராமர், மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். ஆனால் இவர் மற்றொரு அவதாரமான ராமர் மற்றும் கிருஷ்ணருடன் வாழ்ந்துள்ளார். ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரண்டு அவதாரங்களிலும் இரட்டை அவதாரமாக தோன்றியவர் பரசுராமர். ராமாயணத்தில், சீதையின் தந்தை ஜனக மகாராஜாவிற்கு புகழ்பெற்ற சிவ தனுசை பரிசாக வழங்கியவர் பரசுராமர் தான். மகாபாரதத்தில் இவர் மிகப் பெரிய மாவீரனாக குறிப்பிடப்படுகிறார். பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகிய வீரர்கள் வரிசையில் பரசுராமரும் குறிப்பிடப்படுகிறார்.

அனுமன் :

தீவிர ராம பக்தரான அனுமன் தான் ராவணனுக்கு எதிரான போல் மிகப் பெரிய பலமாகவும், வலிமை மிக்கவராகவும் துணையாக நின்றவர். மகாபாரதத்திலும் பீமனுக்கும், அனுமனுக்கும் சுவாரஸ்யமான சண்டைகள் நடக்கும். இவர்கள் இருவருமே வாயு தேவரின் புதல்வர்கள் என்பதால் இவர்கள் சகோதரர்களாகவே கருதப்படுகிறார்கள். மகாபாரத்தில் அனுமனை, சாதாரண குரங்கு என்று தவறாக நினைத்து, பிறகு அனுமனின் வாலை நகர்த்த முடியாமல் தோற்றுப் போய், இறுதியாக அவரது பலத்தை புரிந்து கொண்டார்.

விஸ்வாமித்ரர் :

விஸ்வாமித்ரர், மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படுகிறார். இவரே ராமருக்கும், லட்சுமணருக்கும் குருவாக இருந்துள்ளார். இவரது மகள் சகுந்தலைக்கு பிறந்த மகன் தான் பரதன். பரத பேரரசின் மிகப் பெரிய பேரரசராக பரதன் திகழ்ந்தார். இந்த பாரத தேசம் தான் மகாபாரதத்தில் பாண்டவர்களாலும், கெளரவர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.

அகத்தியர் :

அகத்திய முனிவர் தான் அகத்திய சம்கிதா என்ற நூலை அருளியவர். இவர் தான் ராமாயணத்தில், ராமருக்கு ஆதித்ய ஹிருதயத்தை அளித்தார். இதை பாராயணம் செய்து தான் ராமர் தனது துன்பங்களில் இருந்து விடுபட்டு, ராவணனையும் வெற்றி கொள்ள துணை செய்தது. மகாபாரதத்தில், மிகப் பெரிய பலம் வாய்ந்த அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை உருவாக்கி, அதை துரோணருக்கு அளித்தவரும் அகத்தியர் தான்.

விபீஷ்ணர் :

ராமாயணத்தில் ராவணனின் தம்பியான விபீஷணன், ராவணனால் வெளியேற்றப்பட்ட பிறகு, ராமருக்கு துணையாக உண்மையின் வழியில் நடக்க தனது சொந்த குடும்பத்தையே எதிர்த்து போர் செய்தவர். ராவணன் தோற்கடிக்கப்பட்ட பிறகு விபீஷணன், இலங்கையின் மன்னாக முடி சூடினான். ஆனால் அவருக்கு தெரியும் தனது குடும்பத்தை எதிர்த்து நின்றதற்கான விலையை கொடுக்க வேண்டும் என்று. மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் இலங்கையை வென்ற போது அரசை துறந்தவர் விபீஷணர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.