Breaking News :

Friday, October 04
.

புத்திர பாக்கியம் பெற எந்தெந்த கோயிலுக்கு போகலாம்?


1. குழந்தை பாக்கியம் மிகவும் முக்கியமானது என்பதால் திருவள்ளுவர் மக்கட்பேறு என்ற ஒரு அதிகாரத்தையே தனது திருக்குறளில் இடம் பெறச் செய்துள்ளார்.

 

2. மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது.

 

3. ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

 

4. ராமாயணத்தில் பாலகாண்டம் 18-வது ஸ்வர்க்கத்தை 45 நாட்கள் பாராயணம் செய்தல் வேண்டும். அவ்வாறு பாராயணம் செய்ய இயலாதவர்கள் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டால் கூடப் பலன் உண்டு.

 

5. பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

 

6. பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்புடையது ஆகும்.

 

7. ராகு தோஷத்தினால் பிடிக்கப்பட்டுப் புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமணஞ்சேரித் தலத்திற்குச் சென்று அங்குள்ள சப்ர சாகர தீர்த்த்தில் நீராடி, அங்கு கோயில் கொண்டிருக்கும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து வழிபட்டால் ராகுவின் அருள்கிட்டும். நிவேதனத்தைச் சிறிது அருந்தினால் ராகு தோஷம் நீங்கப் பெற்றுப் புத்திரப்பேறு பெறுவர்.

 

8. `புத்ரதா' என்றழைக்கப்படும் தை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று உபவாசம் இருந்து நாராயணனை வழிபட்டு மறுநாள் துவாதசி அன்று துவாதசிப் பாரணை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

 

9. புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும்.

 

10. சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும்.

 

11. வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு.

 

12. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும்.

 

13. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும்.

 

14. ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும்.

 

15. ஒருமுறை காசிக்கு சென்று கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

 

16. தங்கள் மனைவியருடன் அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில் புத்திர பாக்கியம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கை இனி தாய் அமையும்.

 

17. பசு வளர்த்து அதற்கு சேவை செய்து வந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 

18. திருவாரூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ராஜகோபாலப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 

19. சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாதவர்கள் அங்கு சென்று சமயபுரத்தாளை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

 

20. மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 

21. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

22. குழந்தை இல்லாத குறையை நீக்க அரச மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48 நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி போட்டு விளக்கு ஏற்றி வரவும்.

 

23. அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.

 

24. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று, பகல் உணவு அருந்தி, மாலை கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம், புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 

25. காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்க மாகவும் பெண்கள் இடது பக்கமாகவும் சுற்றி வர வேண்டும். இவ்வாறு 21 முறை சுற்றவும். இதனால் பிள்ளைப் பேறுக் கிடைப்பது மட்டுமல்லாது பிற கர்ப்ப கோளாறுகள் நீங்கும். இதனால் தான் அரச மரத்தின் கீழ் இருபாம்புகள் பிணைந்து கிடப்பது போன்ற கற்சிலைகள் இருக்கின்றன.

 

26. ஏழைகளுக்கு தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 27. அரசும் வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இதை வலம் வரும்போது நம் உடலில் உள்ள சில சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. குழந்தை இல்லாத பெண்களின் சூலகம் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. இதனால் புத்ர பாக்கியம் உண்டாகும்.

 

28. அம்மனை வழிபடும் போது மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

29. நவக்கிரகங்களை வணங்குவதால் பல்வேறு பலன்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. புத்ர பாக்கியம் விரும்புபவர்கள் குரு (வியாழன்) பகவானை தினமும் வழிபட்டால் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

 

30. வலங்கைமான் கீழ விடையலில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் மிக சிறந்த புத்திர பாக்கியம் அருளும் தலமாகும்.

 

31. ஞானசம்பந்தர் பாடிய திருச்சிராப்பள்ளி மற்றும் திருவெண்காடு ஆகிய தேவாரப் பதிகங்களைப் படிப்பதால் குழந்தைப்பேறு ஏற்படும்.

 

32. ஆதி சங்கரர் அருளிய சவுந்தர்ய லஹரியின் 6, 74, 94-வது சுலோகங்களைப் படிப்பதால், முறையே மலடு நீக்கம், புத்திரப் பாக்கியம், கர்ப்பம் தரித்தல் நடைபெறும்.

 

33. சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் எழுதிய கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரத்தைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

 

34. வளைகாப்பு நடக்கும் பெண்ணின் பக்கத்தில் மறுமணையில் அமர்ந்து வளையல் அடுக்கிக் கொள்ளும் பெண் விரைவில் கர்ப்பம் தரிப்பாள்.

 

35. குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் பல புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று அங்குள்ள மரத்திலோ, உள்ளே சந்நிதியிலோ மரத் தொட்டில் வாங்கிக் கொண்டு போய் கட்டலாம்.

 

36. குழந்தை பிறந்து 8-ம் நாள் காப்புப் போடும்போது அம்மிக் குழவியை அலம்பி மை வைத்துப் பொட்டிட்டு அலங்கரிக்கும் பெண்ணுக்கும் விரைவில் குழந்தை பிறக்கும்.

 

37. சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள அபினவம் கிராமத்தில் உள்ள அத்த னோரம்மன் கோவிலில் தொட்டில் கட்டினால் உடனடி புத்திரபாக்கியம் கிடைக்கும்.

 

38. சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலிலும் தொட்டில் கட்டி பயன் பெறலாம்.

 

39. கூடுவாஞ்சேரியில் உள்ள பல்லவர் காலப் பெருமாள் கோவிலில் காலையில் குளித்து சுத்தமாகச் சென்று தொட்டில் கட்டினால் குழந்தைப்பேறு உண்டாகும்.

 

40. சில கோவில்களில் தூளி கட்டுவதும் வழக்கத்தில் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் தூளி கட்டி வழிபடலாம்.

 

41. கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருக்கும் நவநீத கணபதிக்கு வெண்ணை சார்த்தி வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 

42. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரியை வணங்கி, பிரசாதமாக தரப்படும் மஞ்சளை பெண்கள் தினமும் பூசி குளித்து வந்தால் மகப்பேறு உண்டாகும்.

 

43. திருவாரூர் மாவட்டம் தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் கல்லில் வளரும் வாழை. இந்த வாழைக்கு திங்கட்கிழமைகளில் பூஜை செய்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

 

44. செல்வங்களுள் சிறந்ததாகக் கருதப்படும் மழலைச் செல்வத்தை மனிதன் தர்மத்தின் அடிப்படையில்தான் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே தர்மாதிபதியான குருவை புத்திரக் காரகனாக ஆக்கி வைத்துள்ளார்கள்.

 

45. ஆனிமாதம் பவுர்ணமி அன்று கடைபிடிக்கப்படும் ஓர் முக்கியமான விரதம் சாவித்திரி விரதமாகும். இவ்விரதம் மேற்கொள்பவர்கள் சகல பாக்கியங்களும் புத்திர பாக்கியம் மற்றும் செல்வம் பெற்று எமபயமின்றி வாழ்வர் என்பது ஐதீகம்.

 

46. நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துக்குள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

 

47. சென்னை மேற்கு மாம்பலத்தில் முத்தாலம்மன் ஆலயம் உள்ளது. இங்கு தல விருட்சமாக அரச மரம் அமைந்துள்ளது. நாகதோஷம் நீங்கவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் ஏராளமானோர் முத்தாலம்மனை வழிபடுகின்றனர்.

 

48. திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு ரேணுகா அம்மன் ஆலயத்தில் கிருஷ்ணர் சிலையை தலையில் சுமந்து வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

49. குழந்தை பேறுக்காக ஹோமம் செய்ய விரும்புபவர்கள், புத்திரகாம இஷ்டி ஹோமம் செய்யலாம். புத்ர என்றால் குழந்தை, காம என்றால் ஆசை, இஷ்டி என்றால் ஹோமம், குழந்தை ஆசைக்காக நடத்தப்படுவதால் இந்த பெயர் உண்டாயிற்று.

 

50. கிருஷ்ணர் போல குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சந்தான கோபாலஹோமம் செய்தால் பலன் கிடைக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.