Breaking News :

Wednesday, October 16
.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன்?


நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான்.

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும்.

இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே.

பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.

மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.

ஓம் நமோ நாராயணா

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.