Breaking News :

Sunday, February 25
.

ஐந்து அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர் கோவில், கோயம்புத்தூர், பேரூர்


ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

 

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

 

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,

இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து. இதுதான் அந்த அதிசயங்கள்.

 

இறவாத பனை :-

 

பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.

 

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் இறவாத பனை

 

பிறவாத புளி :-

 

அடுத்து பிறவாதபுளி என்றுபோற்ற‍ப்படும்புளிய மரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம்.

 

புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்.  

 

முளைக்கவே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.

 

புழுக்காத சாணம் :-

 

மூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் சாணம் மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.

 

மனித எலும்புகள் கல்லாவது :-

 

அடுத்து மனித எலும்புகள் கல்லாவது. இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யல் ஆற்றில் விடுவார்களாம்.  

 

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்க‍ப்படுகிறதாம். என்ன‍அதிசயமாக இருக்கிறது அல்ல‍வா? அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்..!

 

வலது காதை மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து :-

 

ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார்.  

 

ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது. முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.  

 

அப்போது பல பசுமாடுகள்  இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.

 

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது பட்டீஸ்வரர்.

 

கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன•

 

இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்களைச் சொறிந்து கொண்டிருக்கின்றன•

 

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை

நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் திப்பு சுல்தான். 

 

இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்.  

 

ஆம் இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அடிக்க‍டி அசையும் என்று, இதை நம்பாமல் அதன் மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் திப்பு சுல்தான்.

 

அப்போது அவன் உடலில் அதிர்வுகள்தோன்றி

இருக்கின்றன. நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்துதுடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுயநினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

 

கோயிலுக்கு நிலங்களை மானியமாகதந்திருக்கிறான். இவனைப் போன்றே ஹைதர் அலியும் நிலங்களை மானியங்களாக

தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள்காணப்படு கின்றன.

 

இக்கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வரனின்சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்களைப் பார்ப்போம்.

 

இங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.

 

அன்னையின்அன்பு முகத்தைபார்த்துக்கொண்டேயிருக்க‍லாம். அவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். 

 

இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன.

 

அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து. 

 

ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் கவினுற வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன.

 

குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.

 

சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது. 

 

மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.

 

அருள் நிரம்பிய இந்த ஆலயத்தை பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும், காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.