Breaking News :

Wednesday, April 24
.

நவராத்திரியின் பூஜைகளும் பலன்களும் பெரியது!


ஆதி பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடனை வீழ்த்தினாள்.  சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த நாளே நவராத்திரி மகோற்சவம்.

நவராத்திரியின் முதல் 3 தினங்கள் துர்க்கா; அடுத்த 3 நாள்கள் லட்சுமி; கடைசி 3 நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் 10-ம் நாள் ஆயுத பூஜையாக வணங்கப்படுகிறது. விஜயதசமிக்கு புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்கு நன்மையாகும். நவராத்திரி தினத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகுமாம். நவராத்திரி நாட்களில் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அஷ்டமி நாளை "துர்காஷ்டமி' என்றும் அழைப்பர். இந்த நாட்களில் துர்க்கையை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும்.

ஒன்றாம் நாள்: மகேஸ்வரி

திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள் : ராஜராஜேஸ்வரி

திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள்: வாராகி

திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள்: மகாலட்சுமி

திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் : மோகினி

திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.
வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள் : சண்டிகாதேவி

திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள் : சாம்பவி துர்க்கை

திதி : சப்தமி.கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

எட்டாம் நாள் : நரசிம்ம தாரினி

திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி

திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்தும் வழிபட வேண்டும்.அதுவும் முடியவில்லை என்றால்  அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.

இந்த பூஜைகளை செய்வோர்க்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாக கிடைக்கும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

ஓம்ஸ்ரீ


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.