Breaking News :

Thursday, December 05
.

உங்கள் நட்சத்திரத்திற்கான கோவில்கள்?


உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் தான் பிறக்கிறார்கள். அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவரவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலன்களைத் தரும்.

ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோவில் வழிபாடும் மிகவும் அவசியமாகும்.

நட்சத்திரத்திற்கு உரிய கோவில்கள்

அஸ்வினி  - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைபூண்டி
பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் நல்லாடை, நாகப்பட்டினம்
கார்த்திகை - அருள்மிகு ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வர் கோவில், கஞ்சா நகரம், நாகப்பட்டினம்
ரோகிணி - பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம்.
மிருகசீரிஷம் - ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோவில், எண்கண், திருவாரூர்
திருவாதிரை - ஸ்ரீ ஆபயவரதீஸ்வரர் திருக்கோவில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர்.
புனர்பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, வேலூர்.
பூசம் - அருள்மிகு அட்சயபுரிஸ்வரர் திருக்கோவில், விளங்குளம், தஞ்சை.
ஆயில்யம் - ஸ்ரீ கற்கடேஸ்வரர் திருக்கோவில், திருந்து தேவன் குடி, தஞ்சை
மகம் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், விராலிப்பட்டி
பூரம் - ஸ்ரீ ரி தீர்த்தேஸ்வரரர் திருக்கோவில், திருவரங்குளம்.
உத்திரம் - ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில், இடையாற்றுமங்கலம்.
அஸ்தம் - ஸ்ரீ கிருபாகூபரேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்.
சித்திரை - சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவில், குருவித்துறை.
 சுவாதி - சித்துக்காடு தாத்திரிஸ்வரர் திருக்கோவில், சென்னை
விசாகம் - அருள்மிகு முத்துகுமாரசுவாமி திருக்கோவில், திருநெல்வேலி
அனுசம் - அருள்மிகு மாலட்சுமீஸ்வரர் திருக்கோவில், திருநின்றியூர்.
கேட்டை - அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில், தஞ்சாவூர்
மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில், மப்பேடு
பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்
உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், கீழப்பூங்குடி, சிவகங்கை
திருவோணம் - அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில், வேலூர்
அவிட்டம் - ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்
சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்
பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ;வரர் திருக்கோவில், ரங்கநாதபுரம், தஞ்சாவூர்.
உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ர லட்சுமீஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை
ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், திருச்சி

இக்கோவில்களில் இருக்கும் தெய்வங்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வணங்குவதன் மூலம் அவருடைய நட்சத்திர தெய்வங்களின் கருணைப்பார்வையை பெற்று வாழ்வில் சிறப்படையலாம்.

நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று, நம்பிக்கையுடன் வழிபட்டு வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைந்து நன்மை உண்டாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.