பக்தர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வரும் பழமையான மந்திரமாக ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் சொல்லப்படுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரம் என இது சொல்லப்பட்டாலும் இந்த மந்திரத்தை சொல்வதால் என்ன பலன் கிடைக்கும், இது சிவ பெருமானை குறிக்கும் மந்திரமா, இந்த மந்திரத்தை எந்த நேரத்தில், எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பது போன்ற பல சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது.
ஓம் நம சிவாய மந்திரத்திற்கு என்ன அர்த்தம்?
ஓம் - ஆத்ம சக்தியை தூண்டும் பிரணவ ஒலி;
நம - வணங்குகிறேன்;
சிவாய - சிவன் அல்லது தன்னை தானே குறிக்கும் சொல்.
ஓம் நமசிவாய - பிரபஞ்சம் முழுவதும் நிறை ந்திருக்கும் சிவனை வணங்குகிறேன். என்னுள் நிறைந்திருக்கும் சக்தியை வணங்குகிறேன் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஓம் நம சிவாய மந்திரத்தை எப்படி சொல்ல வேண்டும்?
கால்களை மடக்கி, முதுகு நேராக இருக்கும் படி யோக நிலையில் அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி ஓம் நம சிவாய மந்திரத் தை சொல்ல வேண்டும்.
ஓம் நம சிவாய மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும்?
ஓம் நம சிவாய மந்திரத்தை எண்ணிக்கை யுடன் சொல்வதை விட, எண்ணிக்கையின் றி முடிந்த வரை சொல்லிக் கொண்டே இருப்பதே சிறப்பான பலனை தரும்.
நம சிவாய என்பது எதை குறிக்கிறது?
நம சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது. ந - பூமி, ம - நீர், சி - நெருப்பு, வா - காற்று, ய - ஆகாயம்.
நம சிவாய மந்திரம் சொன்னால் என்ன மாற்றம் ஏற்படும்?
நமக்குள் இருக்கும் ஆணவம், பகையை நீங்கி மன அமைதியும், தெளிவும் அடையும். சரியான பாதையில் வழி நடத்தும். பிரச்ச னைகள், கவலைகளில் இருந்து வெளிவரும் வழியை மனம் தானே உணரும். பய உணர்வு, நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்களை நீக்கும்.
நம சிவாய மந்திரத்தை எந்த இடத்தில் சொல்ல வேண்டும்?
நம சிவாய மந்திரத்தை வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். திறந்த வெளியில் அமர்ந்து சொல்வது பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து பல மடங்கு நன்மையை பெற்று தரும்.
நம சிவாய மந்திரம் சொல்ல உகந்த நாள், நேரம் எது?
நம சிவாய மந்திரத்தை சொல்வதற்கு நேரம், காலம் ஏதும் கிடையாது. தினமும் அதிகாலையில் எழுந்ததும் நம சிவாய மந்திரத்தை உச்சரிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் மன தூய்மையை உண்டாக்கி, நமது பிரச்சனைகளுக்கான தீர்வை நமக்குள்ளேயே உருவாக்கி தரும்.
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே....