Breaking News :

Monday, February 10
.

முருகனின் மூலமந்திரம்?


இதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பதிவு.

மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில்
இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது.

"கந்தகுரு கவசம்"
முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
*முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்!
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா*
ஐம் க்லீம்
க்லௌம் ஸௌம்

ஸ்ரீம் ஹ்ரீம் சரவணபவாய நம:
ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும்.

அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது.

நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.
எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம்.
ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்

2.சரவணபவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
க்லீம் ஸௌம்
சரவணபவ தேவாய ஸ்வாக !
திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை
16முறை ஜெபித்து கற்பூரம் அணைந்தவுடன் விபூதியை இட்டுக் கொள்ளலலாம்.
இதனால் சகல வினைகளும் தீரும்.

சத்ரு பயம் நீங்கும்.
வேல் வடிவம் தங்கம்,வெள்ளி அல்லது செப்பு ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் செய்து வழிபடலாம்.
வேலின் மத்தியில் சிவப்பு கல் பதிக்கப்பெற்றால் இன்னும் சிறப்பு.
வண்டியில் வத்து வழிபட நன்மை பயக்கும்.

விபத்து நேராது.
அதற்கு முன் வேலினை பூஜை அறையில் வைத்து 45 நாட்கள் மந்திரம் ஜெபித்து வழிபடவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.