Breaking News :

Sunday, September 08
.

மூட்டு வலி நீக்கும் முருகப் பெருமான் கோயில்!


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர்.

முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார்.

அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.

மேலக்கொடுமலூர் என்றால் 'வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்' என்ற அர்த்தமும் உண்டு.

அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு
திரும்பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர்.

அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அவர்களுக்கு அருளாசி வழங்கினார்.
மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது.

இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாகவும், சுயம்பு மூர்த்தியாகவும் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கோயிலும் மேற்கு நோக்கியே இருப்பதால் மேற்கு கொடுமலூர் என்பது மருவி மேலக்கொடுமலூர் என அழைக்கப்படுகிறது.

பாம்பன் சுவாமிகள், எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர் ஆகியோர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

மாலை நேரத்தில் மட்டுமே இக்கோயிலில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் வைகாசி மாதக்கடைசி வெள்ளிக்கிழமை மா, பலா, வாழை இவை மூன்றும் இணைந்த முக்கனிகளால் ஆன அபிஷேகம் நடைபெறுகிறது.

இச்சிறப்பான அபிஷேகத்திற்கு "முப்பழ பூஜை' என்று பெயர்.

அப்போது, முருகப்பெருமானின் அழகை தரிசிப்பதற்காகவே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
ஆடி கார்த்திகை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்கள் இங்கு விசேஷம்.

இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் இல்லை.
இதனால் பெண்கள் யாரும் இங்கு பொங்கல் வைப்பதில்லை.

தேன் கலந்த தினைமாவு, வெல்லம் கலந்த பாசிப்பருப்பு, கைக்குத்தல் அரிசி, பழங்கள் இவையே படைக்கப்படுகின்றன.

அசுரனை வதம் செய்து விட்டு திரும்பும் வழியில் முருகப்பெருமான் இங்கு வந்து தங்கியிருந்தாராம்.
அப்போது அவர் பல் துலக்கிய பிறகு வலது புறமாக வீசப்பட்ட குச்சியே பெரிய அளவில் வளர்ந்து ஸ்தல விருட்சமாக (உடைமரம்) நிற்கிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதமிருந்து ஸ்தல விருட்சமான உடைமரத்து இலையை சாப்பிட்டு குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுகின்றனர்.

தீராத மூட்டு வலி உடையவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து மஞ்சள் பூசப்பட்டகவட்டை போன்ற வடிவிலான உடைமரக் குச்சிகளில் பூவைச் சுற்றி கோயிலை வலம் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினால் மூட்டு வலி நீங்குகிறது.

வயிற்றுவலி, நெஞ்சுவலி உள்ளவர்களும் மாவிளக்கு வைத்து வழிபட்டு குணமடைகின்றனர்.
இருப்பிடம்: மேலக்கொடுமலூர் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

சுற்றுப்புற கிராம மக்களால் இக்கோயில் "குமரய்யா கோயில்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
பரமக்குடியிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் உள்ள இக்கோயிலுக்கு, நகரப் பேருந்துகள் மூலமாக செல்லலாம்.

திருவிழாக்கள்:

பங்குனி உத்திர திருவிழா, வைகாசி கடைசி வெள்ளி, முப்பழபூஜை திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா, தைபூசத் திருவிழா  

தல சிறப்பு:
 மேற்கு பார்த்த திருக்கோவிலில், முருகனும் மேற்கு பார்த்தபடி அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். சுவாமிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் அபிஷேகம் மற்றும் பூஜை.இரவில் மட்டுமே அபிஷேகம்.
 
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு 10 மணி வரை. அபிஷேக காலங்களில் இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும்.  

ஆலய முகவரி:
அருள்மிகு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், மேலக் கொடுமலூர். அபிராம், இராமநாதபுரம் -623601  
தொடர்புக்கு: பரம்பரை அறங்காவலர் ஆனந்த நடராஜன், போன்:98434 30230.

இத்திருக்கோவில் திருச்செந்தூர் சூர சம்ஹாரத்துடன் தொடர்பு கொண்டமையால் இது யுகங்களுக்கு முற்ப்பட்ட கோவிலாக கணக்கிடப்படுகிறது.  
 
இந்த குமரக் கடவுளை வேண்டுவோர்க்கு, வேண்டியவையெல்லாம் கிடைக்கப் பெறுகிறது. இது அனுபவ பூர்வமான உண்மை.

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகின்றது. குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விரைவில் குழந்தை செல்வம் கிடைக்கின்றது. கை, கால் மற்றும் தீராத மூட்டு வலி நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு குணமாகின்றது. சத்ரு சம்ஹார மூர்த்தியாக அருள் பாலிப்பதால் எதிரி பயம் நீங்குகின்றது.  

நேர்த்திக்கடன்:
ஸ்கந்த ஹோமம், சண்முகா அர்ச்சனை, சத்ரு சம்ஹார அர்ச்சனை. 33 அபிஷேகம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது.


இத்திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் உடை மரம் ஆகும்.
இம்மரத்தின் விஷேசம் என்னவெனில், இம்மரம் முருப்பெருமானால் பல் துலக்கி எறியப்பட்ட குச்சியாகும்.

இம்மரத்திற்கு வேர் கிடையாது.
ஒரு குடைபோல் காட்சியளிக்கும்.

பூ பூக்கும், காய்காய்க்கும், அதன் நெத்துகள் கீழே-விழும்.ஆனால் திரும்ப முளைப்பது இல்லை.
சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் இல்லை,
கைக்குத்தல் அரிசி, பாசி பருப்பு, வெல்லம் மற்றும் தினைமாவு தேன் இவை மட்டுமே நைவேத்தியம்.
குமரக்கடவுளுக்கு மாதா மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலே இரவு 33 அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.  

தல வரலாறு:
சூரனையும் அவனது தம்பியையும் சம்ஹாரம் செய்வதற்கு குமரன் அன்னை பார்வதி தேவியிடம்  மழு என்ற ஆயுதத்தை கொடு என்று கேட்டதாக ஐதீகம். ஆகையினால் இவ்வூர் கொடு மழுவூர் என்று அழைக்கப்பட்டது. பின்னாலில் இது கொடுமலூர்  என்று அழைக்கப்படுகிறது.

திருச்செந்தூரிலே முருகன் சூர பதுமனை சம்ஹாரம் செய்து விட்டு அவனது தம்பியான பானு கோபனையும் சம்ஹாரம் செய்து அவனது தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு நேராக மேலக் கொடுமலூர் வந்து இங்கு வாழ்ந்த ரிஷி, முனிவர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இங்கு முருகன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்கு முருகனின் திருப்பெயர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி ஆகும்.
அருள் மிகு குமரக்கடவுள் சம்ஹார மூர்த்தியாக போர்க்கோலத்தில் நின்று பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.  

அதிசயத்தின் அடிப்படையில் மேற்கு பார்த்த திருக்கோவிலில், முருகனும் மேற்கு பார்த்தபடி அருள்பாலிப்பது சிறப்பு.

இங்கு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

சுவாமிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் அபிஷேகம் மற்றும் பூஜை.இரவில் மட்டுமே அபிஷேகம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.