Breaking News :

Sunday, September 08
.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் பூஜைகள்?


முதேவியை முதுகிலும், லட்சுமியை முகத்தில் குடியமர்த்துங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

 

குளிக்கும்போது ,எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ளவேண்டும்.

 

துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும்

 

நாம் தினமும் குளிக்கும்போது , மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் , வாசலில் காத்துகொண்டு நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நம் உடலில் வந்து அமர்வதற்கு.

 

நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு விவாதம்.

 

அந்த விவாதப்படி, அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்கிறபடியால், நாம் குளித்து முடித்தவுடன், தலையை துவட்டிக்கொள்ளக்கூடாது .

 

அப்படி துடைத்தால், அங்கு மூதேவி வந்து அமர்கிரபடியால் நம் புத்தி வேலை செய்யாது.

 

ஆகவே முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது மூதேவி முதுகில் அமர்வாள்.

 

அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி அமர்வாள். நாம் சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்ப்பு கிடைக்கும்.

 

முதலில் முகத்தை துடைத்து கொண்டால் மூதேவி அமர்வாள். நம்மை பார்த்தாலே பலருக்கு பிடிக்காது. இதுவே காரணமாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.