Breaking News :

Saturday, March 02
.

லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏன்?


கடன் தொல்லை தீர எளிய 

லட்சுமி நரசிம்மர் வழிபாடு*!!!

 

"லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம் 

கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.

 

கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.

 

இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.

 

    "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "

என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும். தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுதல் நீங்கவும் இது சிறந்த பரிகாரம்.

 

 ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.  இன்று 26/12/23 செவ்வாய்கிழமை  அன்று  பதிவு செய்துள்ளோம்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி

 

'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

 

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை

கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

 

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

பூமி நீளா சமேத ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:

 

ரொம்ப சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் தீரும். ரொம்ப கஷ்டம் என்றால் ஒரே நாளில் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம் புன்னகை

 

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாளே போற்றி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.