குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் வழிபடப்பட்டு வரும் தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பெயர். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபட்டு, அந்த தெய்வத்தின் அருளை பெறுவது தான் முக்கியம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபட்டு வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதே போல் குலதெய்வ வழிபாடும் முக்கியம்.
குலதெய்வத்தை முறையாக வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நிம்மதி, மகிழ்ச்சி, முன்னேற்றம், செல்வம் ஆகியவை கிடைக்கும்.
குலதெய்வத்தின் அருளை பெற என்ன செய்வது?
குலதெய்வம் கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ சென்று கண்டிப்பாக வழிபட்டு வர வேண்டும்.
குலதெய்வம் கோவில் வெகு தொலைவில் உள்ளது, அடிக்கடி செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து மிக எளிமையாக அதற்கு பூப்போட்டு தினமும் வழிபட்டு வரலாம்.
குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட வேண்டும்?
குலதெய்வத்தை வழிபட்டு, குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுவது ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள்.
ஒருவேளை உங்களின் குலதெய்வம் சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய முனீஸ்வரர் போன்ற தெய்வங்களாக இருந்தால் திங்கட்கிழமையில் சென்று வழிபடலாம்.
முருகனுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய்கிழமையில் சென்று வழிபடலாம்.
பெருமாளுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமையில் சென்று வழிபடலாம்.
அம்பாள் அல்லது பெண் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடலாம்.
அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய இரண்டு நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றவையாகும். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு நேரில் சென்றோ அல்லது வீட்டிலேயோ குலதெய்வத்திற்கு ஏதாவது நைவேத்தியம் செய்து படைத்தும் வழிபட்டு வரலாம்.
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?
ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் என எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றை எவ்வளவு தீவிரமாக வழிபட்டாலும் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை வழிபட வேண்டியது மிக மிக அவசியம்.
ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும்.
ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
குலதெய்வத்தை முறையாக வழிபட்டு, குலதெய்வத்தின் அருளை பெற்றால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளை பெற முடியும்.
வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், தடைகள், பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அந்த நிலை மாற வேண்டும் என்றால் முறையாக குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. நீங்கள் வழிபடும் இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம்.
குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டு வருபவர்கள் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
கு பண்பரசு