Breaking News :

Sunday, September 08
.

குபேர கிரிவலம் வழிபாடு ஏன்?


செல்வத்தை அள்ளி் கொடுக்கும் திருஅண்ணாமலை குபேர கிரிவலம்.

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?

மிக சுலபமான தாந்திரீக ஆன்மீக வழிமுறைப்படி  கீழ்கண்ட வழிபாட்டைச் செய்தால் போதும்.
பல நூற்றாண்டுகளாக மகான்கள்-சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது. திருஅண்ணாமலையில்
உள்ள குபேரலிங்கம் கோவிலுக்கு வந்து  குபேரலிங்கத்தை வழிபட்டு விட்டு,நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையாரின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.
இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.

நாமும்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் வாழு வழிபிறக்கும்.
ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.

 குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்.

மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.
இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிரிவலம் செல்லும் போதே, அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்.

ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல்
போனாலும் தப்பில்லை.

கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது. ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.

கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.
தங்கி, மறு நாள் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக
அவரவர் வீடு திரும்ப  வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.

அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் முழுமையாக கிடைக்கும்.

திரு அண்ணாமலை கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது என்பதால் கிரிவலத்தின்போது  வெட்டிக்கதை ஏதும் பேசக்கூடாது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.