நாம் வாழ்நாளில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு வடிவில் சிவ பெருமானைக் காண முடியும்.
லிங்க வடிவத்திலோ,உருவ வடிவத்திலோ இந்த அண்டத்தைக் காக்கும் கடவுளாக சிவன் நம்முடனேயே பயணித்து வருகிறார் என்பது நம்பிக்கை.
சிவலிங்கம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவமாக உள்ளது நாம் அறிந்ததே.எத்தனையோ மகிமைகள் இந்த சிவலிங்கத்தில் புதைந்து கிடக்கின்றன.
நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு திருத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள் சிவன் கருவறையில் இரண்டு லிங்கமாக காட்சியளிக்கிறார்.
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள இந்தத் தலத்தில் மட்டுமே இத்தகைய வியக்கத்தகுந்த நிகழ்வு நடந்துள்ளது.
சிவபெருமானையும்,சக்தி அன்னையையும் வழிபட வந்த முனிவர்,சிவனை மட்டும் வழிபட்டுச் சென்றார்.இதனால் மனமுடைந்த அன்னையோ,சிவனிடம் எனக்கும் உங்களது அருளில் சம பங்கு வேண்டும் என கூற,பூலோகத்தில் உள்ள கச்சியம்பதிக்குச் சென்று என்னை தரிக்க வேண்டும் என சிவன் அறிவுருத்தினார்.
அன்னையும் அவ்வாறு வழிபட்டு வரம் பெற்றார்.பின்,திருவருணைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் தங்கிய அன்னை,கனககிரி நாதரை வேண்டி தவமருந்தார்.
இதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி தேவிகாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் பின்னரே திருவருணை எனப்படும் திருவண்ணாமலையில் தேவி இடப்பாகம் பெற்றார்.இல்ல
சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது கனககிரீசுவரர் கோவில்.மூன்று நிலை கோபுரமும்,நந்தி,விநாயகர்,முருகன்,தட்சிணாமூர்த்தி,அகோர வீரபத்திரர் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
விசாலாட்சி அம்மனுக்கு என தனிச் சன்னதியும் உள்ளது.
மலையின் கீழே பெரியநாயகி அம்மையாருக்கு சன்னதி உள்ளது.இது விஜயநகர கிருஷ்ணதேவராயர் காலத்திய கோவில் என சான்றுகள் மூலம் அறியப்படுகிறது.
சுடுநீரில் அபிஷேகம்
ஒரு காலத்தில் மலையில் இருந்த கிழங்குச் செடியை எடுக்க,இரும்புக் கம்பி கொண்டு ஒருவர் தோன்டியுள்ளார்.அப்போது நிலத்தின் அடியில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது.மேலும் தோன்டிய போது சிவலிங்கம் ஒன்று அடிபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.அந்தக் காயம் குணமடைய வேண்டி அப்போது சுடுநீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.அன்று முதல் இன்று வரை இத்தல லிங்கத்திற்கு சுடு நீர் கொண்டே அபிஷக பூஜை நடைபெறுகிறது.
கோவிலின் உள்மண்டப தூணில் அழகிய சிற்பங்களாக 9 பெண்களின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலையை விட்டு கிழே இறங்கும் வழியில் தேவி தவம் இருந்ததற்கு ஆதாரமாக அன்னையின் திருவடி உள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோவில் 9 கல்லை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்.
அமைவிடம்
அருள்மிகு பெரியநாயகி உடனுறை பொன்மலை நாதர் திருக்கோவில்.திருவண்ணாமலையிலிருந்து 48 கி.மீ.தூரத்திலும்,வேலூரிலிருந்து 60 கி.மீ.தூரத்திலும்,சென்னையிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் தேவிகாபுரம் உள்ளது.