Breaking News :

Friday, October 11
.

காஞ்சிமஹா பெரியவா சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்...*


(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம்.

(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.
அதை குடிக்க கூடாது.

(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.

(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால்
வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்திஅணிய வேண்டியதில்லை.

(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ
எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.

(7) காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

(8) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.

(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

(10) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.

(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(12) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க, வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.