Breaking News :

Friday, July 19
.

நாராயணா சொல்லுக்கு அர்த்தம்?


விஷ்ணு, பெருமாள் என்று பல பெயர்களை கொண்டவர் தான் நாராயணன்.

 

*இவர் பல அவதாரம் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துரைக்கின்றார் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.*

 

கோவிந்தன் என்று அழைக்கும் நாராயணனின் பெயரின் அர்த்தம் தான் என்ன?

 

*அவரின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல இந்த பெயருக்கும் இரு காரணம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம்.*

 

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர்,  தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.

 

பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாக தான்.*

 

நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே   நிலையானது_

 

என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

 

நாராயணன் என்பதை நாரம் + அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.

 

பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.

 

*நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர், நாரதர். நாராயண! நாராயண! என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.*

 

நாரதர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். இவரது பிறப்புக்கு பின் தான் தண்ணீர் அதிகரித்தது.

 

நாராயணின் நாமத்தை துதிக்க நன்மைகள் வந்து சேரும். கோவிந்தன் என்று சொல்ல கொள்ளை இன்பம் ஓடி வரும்.*

 

நாராயணா! ஸ்ரீ ஹரி நாராயணா!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.