Breaking News :

Sunday, September 08
.

தட்சிணாமூர்த்தி கோயில்கள் எங்குள்ளது?


பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் இருக்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோகநிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை. அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றுதான் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரான தட்சிணாமூர்த்தி. ஒரே தக்ஷிணமூர்த்தி ஜோதிர்லிங்கமாக இருப்பதால், இது ஷைவர்களுக்கு ஒரு கற்றல் தளமாக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 112 அடி, தெற்கு நோக்கிய ஆதியோகி சிவன் சிலை (ஆதியோகி - யோகாவின் ஆதாரம்) "யோகேஷ்வர் லிங்கம்" என்று அழைக்கப்படும் லிங்கத்துடன் இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், எடபால் தாலுகா, சுகாபுரத்தில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவில். சுக மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது

கேரளாவில் உள்ள ஏட்டுமானூர் மகாதேவர் கோயில், அங்கு சிவலிங்க வடிவில் இருக்கும் தெய்வம் தட்சிணாமூர்த்தி ஆலங்குடி, கும்பகோணம், தமிழ்நாடு.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவில். இக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள திருப்பந்துறை சிவானந்தீஸ்வரர் கோவிலில் அர்த்தநாரி வடிவில் காட்சியளிக்கிறார். திருப்புலிவனத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். சுசீந்திரம் தாணுமாலயா கோவிலில் (நாகர்கோவிலில் இருந்து 5 கி.மீ., கன்னியாகுமரி மாவட்டம்.), தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார்.
தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் பழமையான தக்ஷ்ணிமூர்த்தி கோவில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மகாகும்பமேளா நாளில்தான் இறைவன் சிலை நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்

சிம்ம குரு தட்சிணாமூர்த்தி  

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம்  வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள்,  மூலவர் சுயம்பு மூர்த்தி.  ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி  ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி  என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய  இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும் ஆகும். பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.

சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்

இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.

திருப்புலிவனம் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார்.

இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் அருகில் சனாகதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது.
செங்கல்பட்டுக்கு அருகே, உத்திரமேரூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் அருகேயுள்ள தலம். இங்கு தட்சிணா மூர்த்தியின் காலடியில் முயலகனுக்கு பதிலாக சிம்மம் உள்ளது.

இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு ‘சிம்ம குரு தட்சிணாமூர்த்தி’ என்றே பெயர். சிம்ம ராசிக்காரர் களுக்கு பரிகாரத் தலமாகவும் இது விளங்கி வருகிறது.

சிவபெருமான்திருப்புலிவனம்Thirupulivanam காஞ்சிபுரம் மாவட்டம்
அயப்பாக்கம்

சென்னையிலிருக்கு அயப்பாக்கம், வட குருஸ்தலம்ன்னே இந்த தலம் அழைக்கப்படுது. இங்க, அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவராம்.

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி, கிளைப்பாதையில் பயணித்தால் அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக வீற்றிருக்கிறார். 6 அடி உயரத்தில் வித்தியாசமான அமைப்புடையது கருவறை மூர்த்தம்.  மூலவரது விழிகள் ஒரு கோணத்தில் யாரையும் காணாதது போலவும், இன்னொரு கோணத்தில்  எல்லோரையும் பார்ப்பது போலவும் இருக்கும். இதுக்கு காரணம், குரு பார்வை கோடி நன்மை தரும். ஒருவரை குரு பார்த்துக்கிட்டே இருந்தா நல்ல பலன் மட்டுமே கிடைக்கும். அப்படி நல்ல பலன் மட்டுமே கிடைச்சா மனுசனுக்கு தலைக்கனம் வந்திரும். குருபார்வை இல்லன்னா கெட்டது மட்டுமே நடக்கும். கெட்டதே நடந்திட்டு இருந்தால் பைத்தியம் பிடிச்சிடும். அதனால்தான் இந்த உருவ அமைப்பாம். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம்

பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் இருக்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோகநிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை. அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

குச்சனூர்

தேனி மாவட்டம் குச்சனூரில் குரு பகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இந்த ராஜயோக தட்சிணா மூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

 பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு பக்கத்திலிருக்கு பட்டமங்கலம். இக்கோயிலில் 2,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்னு இருக்கு. அதுக்கு பக்கத்திலிருக்கும் அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கும்.

சுருட்டப்பள்ளி

ஆந்திர மாநில எல்லையில் இருக்கு சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். இவர் இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்துவார்.

 தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலதுகை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன்கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் குருபகவானை தரிசிக்கலாம்.
இன்று காலை ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் விசேஷ ஆரத்தி.

தாராசுரம்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார்.

வேதபுரி
தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

தென்குடித்திட்டை
தஞ்சாவூர் - திருக்கருகாவூர் வழியிலிருக்கு தென்குடித்திட்டை இருக்கு. நின்ற நிலையில் தட்சிணாமூர்த்தி, ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலம். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனிச்சன்னதியில் கொலுவீற்றிருக்கிறார். அரனின் அருளும், அம்பிகை அருளும் ஒருங்கே இணைத்து அளிக்கும் ஈடில்லா மூர்த்தியாகத் திகழ்கிறார்.

தேப்பெருமாநல்லூர்
கும்பகோணத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலிருக்கு தேப்பெருமாநல்லூர். இங்கு அன்னதான தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 திருஇலம்பையங்கோட்டூர்

பூந்தமல்லியிலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

 திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கென தனிக்கோயில் இருக்கு. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல இருப்பது கொள்ளை அழகு.

 ஆலங்குடி
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவிலிருக்குஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடுகளுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்.

 குருவித்துறை
குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலமே குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உண்டு. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருவையாறு
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத் துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் காட்சியளிக்கிறார். சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

திருவலிதாயம் (பாடி)
சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்திருப்பார்.

 ஏரையூர்
தட்சிணாமூர்த்தி என்றாலே கல்ஆல மரமும், அதனடியில் ஸனத் சகோதரர்கள் அமர்ந்திருக்க ஈசன் தட்சிணாமூர்த்தியாக அவர்களுக்கு மவுன உபதேசம் செய்யும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஏரையூர் திருத்தலத்தில் ஸ்தித தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தரிசனம் தருகிறார். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் கல்ஆலமரம் வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கு இன்க்கோவில்.

 திருநெடுங்களம்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநெடுங்களம். இத்தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார். இவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட தடைகள் தவிடு பொடியாகும்.

திருப்புனவாசல்
இடது கரத்தில் நாகப்பாம்புடன்,   தன் வெற்றியை பறை சாற்றிபடி கம்பீரமான தோற்றத்துடன்,  அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவதுபோல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்திலிருக்கு.

 திருப்புலிவனம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலிருக்கு திருப்புலிவனம். இங்கு சிம்ம குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். ஒரு காலை வழக்கம்போல முயலகன் மீதும், மற்றொரு காலை சிங்க வாகனத்தின் மீதும் வைத்துள்ளார். ‘அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் தம்பதியர் இடையே உள்ள பிணக்குகளை தீர்த்துவைத்து குடும்பத்தில் சுபிட்சத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கெல்லாம் போகமுடியாதவங்க  அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் போட்டு வரலாம்.  பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை தரலாம். கோவில்களை சுத்தம் செய்வதில் கலந்துக்கலாம்.

பள்ளிக்கூடங்களுக்கு கரும்பலகை, மேஜை, நாற்காலி வாங்கித் தருவது, ஆலமரக்கன்றை நட்டு பராமரிக்கலாம். எல்லாத்தையும்விட  தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.  குருவின் நற்பலன்களை அப்படியே பெற அன்னதானம் மிகச் சிறந்தது. குருபகவான் கோவில்களில் பெரும்பாலும் லட்டுதான் பிரசாதம் அதனால், அதுமாதிரியே  இனிய வார்த்தைகளை தானம்  செய்யலாம்.

அதாவது கண்ணே, மணியேன்னு கொஞ்சனும்ன்னு அவசியமில்ல. நஞ்சு தோய்த்த கத்தியாய் வார்த்தைகளை வீசாம இருந்தாலே போதும். மலர்ந்த புன்னகையோடு இனிய வார்த்தைகள் போதும். எனக்கு நாக்குலதான் சனியேன்னு என்னை மாதிரியான ஆட்கள்  மௌனம் காத்தலே சிறப்பு. மனமும் வாயும் தன் வசம் இல்லாதவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கலாம் . கோபமும் உடல் எடையும் குறையும்.  

மௌனமாய் குருபகவான் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்...
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை குரு ஓரையில் தினமும் 21 முறை பாராயணம் செய்தால் குருவருள்  கிட்டும்
நம்புவோம்! நல்லதே நடக்கும்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.