Breaking News :

Sunday, October 13
.

பூமிவராகர் பெருமாள் பூஜையின் பலன்கள்


இந்த ஒரு தெய்வத்தின் படத்தை வீட்டில் மாட்டி வைத்தால், சொந்த நிலம், வீடு வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.

 

நிலம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். 

 

ஒரு அடி நிலம் கூட உங்களால் சொந்தமாக வாங்க முடியவில்லையா அல்லது வாங்கிய நிலம் பிரச்சனையில் உள்ளதா. சொந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் வரவில்லையா. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலை நீங்கள் செய்கிறீர்களா. அந்த தொழில் நஷ்டத்தில் செல்கிறதா அல்லது நிலத்தில் உழுது விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும் நீங்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

 

பூமியில் எந்த யோகமும் உங்களுக்கு இல்லை. ராசி இல்லாமல் உள்ளது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தை நீங்கள் தொடங்கினால் அது உங்களுக்கு நஷ்டம் அடைகிறது என்றால் நீங்கள் ஒரு முறை இதை முயற்சி செய்து பாருங்கள். அனுபவபூர்வமாக பல பேர் இந்த பரிகாரத்தை செய்து பயன் அடைந்துள்ளார்கள்.

 

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாக, பூமிவராகர் திரு உருவப்படமும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் திரு உருவப்படமும் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும். இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் மாட்டி வைத்து தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும்

 

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து, நீங்கள் மாட்டி வைத்திருக்கும் இந்த பூமி வராக, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாக *இரண்டு குபேர விளக்கு தீபம் ஏற்ற வேண்டும் 

 

விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு அந்த எண்ணெயில், ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு அதன் பின்பு, தீபம் ஏற்றி பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று தினமும் இப்படி இந்த வழிபாட்டினை செய்து வந்தால், நிலம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

சிலபேர் நிலம் வாங்குவதற்காக வீடு வாங்குவதற்காக நிறைய கடனை வாங்கிவிட்டு அவதிப்பட்டு வருவார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த பெருமாளின் படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் வழிபாடு செய்து வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும். விவசாயம் செய்பவர்கள் தினம்தோறும் இந்த பெருமாளை வழிபாடு செய்தால் விவசாயத்தில் அமோகமான லாபத்தை பெறலாம். இப்படி நிலத்திலிருந்து கிடைக்க உங்களுக்கு என்ன வரம் வேண்டும் இந்த பூமி வராகரை கேளுங்கள். நிச்சயம் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.