Breaking News :

Monday, September 16
.

ஆவணி மாத பூஜை பரிகாரங்கள்


ஆவணி ஞாயிறு எப்போதுமே விசேஷம்!  சூரிய நமஸ்காரம், சிவா, விஷ்ணு, பிரம்மா வழிபாடு! 

ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும் சிறப்பு : சுபமுகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம்

வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.மங்காத செல்வ கடாக்ஷம் கிடைக்கப் பெறுவீர்கள். ஸ்ரீ சிவசூரியநாராயணஸ்வாமியே திருவடிகள் சரணம் 

இன்று ஆவணி ஞாயிறு விரதம் !

சூரிய வழிபாடு செய்ய மறக்காதீங்க..

 

சிறப்பு : சுபமுகூர்த்த நாள், ஆவணி ஞாயிறு விரதம்

வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.

 

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். இன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

 

ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும்.

 

ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.

 

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆன்மீக அறிவுக்காகவும் தேகநலனுக்காகவும் சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

 

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது. சூரியனுக்காக விரதம் இருந்தால் சரும நோய் நீங்கும்.

 

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!" என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

 

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

 

களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிறன்று சூரியனை வணங்க சூரிய தோஷம் நீங்கும்.அரசு வேலை கிடைக்க ஆவணி ஞாயிறு விரதம் இருப்பது அவசியம்.

 

ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று புற்றுள்ள கோவிலில் பால் ஊற்றி விரதம் இருந்து வழிபடுங்கள்.

 

சூரிய காயத்ரி மந்திரம்

 

ஓம் பாஸ்கராய வித்மஹே

திவாகராய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

 

சூரிய பகவான் மந்திரம்

 

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

 

அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!

 

நாராயணனின் அம்சமே சூரியன். அரசு வேலை வேண்டும் அரசில் உயர் பதவி வேண்டும். சிறந்த அரசியல்வாதிகளாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிறுக்கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் இந்த மந்திரங்களை உச்சரித்து சூரியனை வணங்க நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

ஆவணி மாதம் மகத்தான மாதம். ஆவணி மாதத்துக்கு முந்தைய மாதம் ஆடி. பிந்தைய மாதம் புரட்டாசி. முந்தைய ஆடி மாதத்திலும் ஆவணிக்கு அடுத்த மாதமான புரட்டாசி மாதத்திலும் சுபகாரியங்கள் நடத்தமாட்டார்கள். மாறாக, இந்த இரண்டு மாதங்களிலும் வழிபாடுகள் வெகுவாக நடத்தப்படும்.

 

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று போற்றுகிறோம். இந்த மாதத்தில், அம்மனுக்கு விழாக்கள், விசேஷங்கள் என அமர்க்களப்படும். அம்மனுக்கு திருவிழாக்கள் நடக்கும். கிராமத்தில் உள்ள பெண் தெய்வங்களுக்கு, குடும்ப சகிதமாகச் சென்று படையலிடுவார்கள். படையலிட்டு வேண்டிக்கொள்வார்கள்.

இதேபோல், புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். பெருமாளுக்கு உரிய மாதம்.

 

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னாலும் புரட்டாசி மாதம் முழுவதுமே கோவிந்தராஜனை துதித்துப் போற்றி, வணங்கி வழிபடுவதற்கான மாதமாகவே சொல்கிறார்கள்.

 

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில், பக்தர்கள் தரிசனம் மும்மடங்கு இருக்கும். அசைவப் பிரியர்கள் பலரும் கூட, புரட்டாசி மாதத்தில் சைவம் மட்டுமே உண்பார்கள். சனிக்கிழமைகளில், ‘வெங்கட்ரமணா கோவிந்தா’ எனும் கோஷத்துடன், வீட்டுக்கு வீடு வந்து அரிசியைப் பெற்றுச் சென்று தங்கள் நேர்த்திகடனைச் செலுத்துவார்கள். கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழிக்கும் இந்த வழிபாடு, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தான தருமங்களையும் வலியுறுத்துவதற்காகவே அமைக்கப்பட்டன என்று சொல்பவர்களும் உண்டு.

 

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். நடுவேயுள்ள ஆவணி மாதம், எல்லா தெய்வங்களுக்குமான மாதம். விநாயகர், கிருஷ்ணர் என்று சைவ - வைணவ பாகுபாடுகள் இல்லாமல், சகல தெய்வங்களையும் வழிபடுகிற அற்புதமான மாதம்.

 

ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை ரொம்பவே மகத்துவமானது. ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில் எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்து சூரிய பகவானை நமஸ்கரித்து வேண்டிக்கொள்வது, அறிவையும் ஞானத்தையும் வளர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

 

இதேபோல், மூன்று தெய்வங்களான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் வணங்கித் தொழுது பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களை வழங்கக் கூடியது. சிவனாரை வணங்கி வேண்டிக்கொண்டால், இல்லத்தில் தம்பதி இடையே ஒற்றுமை உண்டாகும். பெருமாளை வணங்கி வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம்.

 

படைப்புக் கடவுளான பிரம்மாவை வணங்கி வேண்டிக்கொண்டால், இந்த இப்பிறவியில் சகல சம்பத்துகளையும் வழங்கி அருளுவார் பிரம்மா. முதல் குரு பிரம்மாதானே. அதனால்தான் ‘குரு பிரம்மா குரு விஷ்ணு..’ என்று சொல்லி வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 

இந்த இப்பிறவியில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற தீமைகளையும் பாவங்களையும் மன்னித்து அருளுகிறார் பிரம்மா.

 

எனவே, ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் முறையே பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களெல்லாம் அரங்கேறித் தருவார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.