ஆத்ம லிங்கம், இஷ்ட லிங்கம், ஷணிக லிங்கம் வழிபாட்டின் சிறப்புகள்

மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடாகும்.

மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்


தன்னிடமே வைத்து தினமும் பூஜிக்கும் லிங்கம் இஷ்ட லிங்கமாகும்.

இந்திரன் ..... பத்மராக லிங்கம்
குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
யமன் ..... கோமேதக லிங்கம்
வருணன் ..... நீல லிங்கம்
விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
வாயு ..... பித்தளை லிங்கம்
அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
சோம ராஜன் ..... முத்து லிங்கம்
சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
மயன் ..... சந்தன லிங்கம்
அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
யோகிகள் ..... விபூதி லிங்கம்
சாயா தேவி ..... மாவு லிங்கம்
சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
யட்சர்கள் ..... தயிர் லிங்கம்

தினமும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தை நீங்களே செய்யலாம்.

புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
1பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும். 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

google.com, pub-5400029598560502, DIRECT, f08c47fec0942fa0