அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு- கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.
பெரியாயியை வழிபடும் பக்தர்களைத் தீய சக்திகள் அண்டாது.
விரும்பியபடி வரன் அமையும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்!
அம்மனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவார்கள்
அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக்கொள்ள குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவை தீர்ந்து விடும்.
தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும்.
வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும்.
அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
புற்று மண்ணைத் தண்ணீர் தீர்த்தம் அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், நோய்கள் விலகும்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
மனநோய் குணமாகும்.
சுடுகாட்டுச் சாம்பலை ஒரு துணியில் கட்டி எடுத்துக்கொள்வார்கள். அந்த மண்ணை வீட்டு வாசலில் கட்டினால், தீய சக்திகள் அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.
அகிலம் காக்கும் அழகுத் தெய்வமாம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை மனதார வேண்டுங்கள். நீங்கள் வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள், அந்தக் கருணைத் தெய்வம்!!
மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.
பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.
சதுர்யுகங்களுக்கும் முற்பட்ட யுகமான மணியுகத்திற்கும் முன்பே தோன்றிய அங்காளியம்மனின் அருளால், நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லாத் தீமைகளும் விலகி, நாளும் நலமே சூழ பிரார்த்திப்போம்.
பேரால் பெருத்த அங்காளி பர்வதராஜகுல பாராளும் பராசக்தி அம்மன் திருவடிகளே சரணம்
நல்லதே நடக்கும் !#தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ பெருவிழாவில் ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னை அநீதிகளையும், தீமைகளையும் அழித்து, தீராத நோய்களைத் தீர்த்து வைத்து சகல ஐஸ்வர்யங்களையும் அருளிடும் #ஸ்ரீராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் அருள்திரு காட்சி தந்து நாடிவந்த பக்தர்களுக்கு நலமே அருள்கின்றாள் அன்னையை தரிசித்து அருள் பெற்றிடுங்கள்...!!!