மதுரை சித்திரைப் பெருவிழா பத்தாம் நாள்

madurai-chithirai-thiruvizha
மதுரை சித்திரைப் பெருவிழா பத்தாம் நாள்

மதுரை சித்திரைப் பெருவிழா பத்தாம் நாள் இன்று காலை 

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வைபவம்.

முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்

அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ

மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்

சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.

    திருஞானசம்பந்தா் தேவாரம்.

 

சடைமறைத்துக் கதிா்மகுடந்தாித்துநறுசங்

 கொன்றையந்தாா் தணந்து வேப்பந்

தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி

 மாணிக்கச் சுடா்ப்பூணேந்தி

விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு

 மகனாகி மீன நோக்கின் 

மடவரலை மணந்துலக முழுதாண்ட

 சுந்தரனை வணக்கஞ் செய்வாம்.

    திருவிளையாடல் புராணம்.