நடிகை நயன்தாரா காதலனுடன் சோட்டாணிக்கரையில் சாமி தரிசனம்

nayanthara-and-vignesh-shiva-darshan
nayanthara and vignesh shiva darshan

கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு நேற்று மாசி மாதம் மகம் நாளில் சிறப்பு பூதைஜகள் நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாஉள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். 

நடிகை நயன்தாரா வருகை தந்துள்ளதை அறிந்த பக்தர்கள் அவரை காண்பதில் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, தரிசனம் செய்துவிட்டு திரும்பிய நடிகை நயன்தாரா அங்கு வரிசையில் நின்றவர்களுக்கு கை அசைத்து காட்டிய பின் அங்கிருந்து திரும்பினார்.