சரஸ்வதி தேவி திருத்தலங்கள் எங்கு உள்ளது?

saraswati-temple-poojai-and-remedy
சரஸ்வதி தேவி திருத்தலங்கள் எங்கு உள்ளது?

நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள். கல்விகளில் புலமைத்துவம் பெற விரும்புபவர்கள் இந்த தேவியை வழிபட்டால், பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி வடிவில் படிக்கின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தேவியை வழிபட்ட பின்னரே பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சரஸ்வதி தேவியின் கையில் எப்போதும் வீணை இருக்கும். ஆனால் வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.

கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.