திருப்போரூர் ஸ்ரீகுக்குடாப் ஜதரர் கோயில்!

thirupporur-sri-kukkudap-jatharar-temple
திருப்போரூர் ஸ்ரீகுக்குடாப் ஜதரர் கோயில்!

திருப்போரூர் திருத்தலத்தில் ஸ்ரீகுக்குடாப் ஜதரர் அருள்பாலிக்கிறார். 

குக்குடம் என்பது கர்பப்பையையும் குறிக்கும். குக்குட ஆசனத்தை முறையாக ஒரு சற்குருவின் மேற்பார்வையில் நிறைவேற்றும்போது பூமியின் புவிஈர்ப்பு சக்தியை மிஞ்சி எவ்வளவோ அற்புதங்களை நிறைவேற்றலாம். 

எனவே கர்பப்பையில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் எவ்வித வேதனையையும் இந்த குக்குட ஆசனம் சீர்செய்யும்.
ஆனால், இந்த குக்குட ஆசனத்தைப் பயிலும் அளவிற்கு பெண்களுக்கு போதுமான உடல் வளம் இல்லை  
திருப்போரூர் சிவத்தலத்தை ஒரு நாளைக்கு ஏழு முறை என்ற கணக்கில் ஏழு நாட்கள் உரியவர் துணையோடு கர்ப்பிணிப் பெண்கள் வலம் வந்து வணங்குவதால் தங்கள் கர்ப்பம் முறையாக வளர்ச்சி பெற இத்தகைய வழிபாடு அவர்களுக்கு துணை நிற்கும். 

தம்பதிகள் திருப்போரூர் ஈசனை வலம் வந்து வணங்கி இருந்தால் நிச்சயம்  மன உறுதி அவர்களிடம் இருக்கும். 

பெண்கள் கர்ப்பம் தாங்கி இருக்கும்போது ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய வழிபாடுகளை இயற்றுவதுடன் சுவாசத்திற்கு உரிய வந்தவாசி ஈசனையும், சரியான உடலமைப்பைக் கொடுக்கும் திருப்போரூர் ஈசனையும், எந்த குறையையும் களைந்து நல்லபடியாக ஆக்கும் ஆக்கூர் ஈசனையும் ஒரு முறையாவது தரிசித்தல், அருள் பெறுதல் சிறப்பு. 

மூளை வளர்ச்சியே இல்லாது, அங்கக் குறைவுடன் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று மருத்துவ ரீதியாக உணர்ந்தால் கூட அதையும் குழந்தைச் செல்வமாகப் பெற்றுக் களித்தலே நம் முன்னோர்கள் மரபு என்பதை மறக்க வேண்டாம். 

ஒரு நாளைக்கு ஏழு முறை என்று ஏழு நாள் திருப்போரூரை வலம் வரும்போது அது 49 என்ற கணக்கில் அமையும். இதில் 4, 9 என்ற எண்கள் இராகு பகவானுக்கும், செவ்வாய் பகவானுக்கும் உரியதாக அமைவதால் கர்ப்பத்தை பலவீனமாக்கும் எத்தகைய எதிர் சக்திகளையும் இந்த வலங்கள் முறியடிக்கும் என்பதே இந்த எண் கணித சக்திகள் உணர்த்துவதாகும்.