ஒப்பில்லா வாழ்வு தரும் ஒப்பிலியப்பன்!

oppiliyappan-temple-kumbakonam-thirunageswaram
ஒப்பில்லா வாழ்வு தரும் ஒப்பிலியப்பன்!

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அழகான கோயில்தான் ஒப்பிலியப்பன் ஆலயம்.அற்புத மூலிகையான துளசி தேவி “மகாலஷ்மியை தங்கள் மார்பில் சுமக்கிறீர்கள். அதுபோல் எனக்கும் உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்” என்றாள்.

 “என்னுள்ளே இருக்கும் உனக்கு, எந்த இடத்தில் இடம் தருவது என நீயே சொல்” என்று துளசியை சமாதானம் படுத்தி அதற்காகவே துளசியை பூமியில் பிறக்க வைத்து அவளை மணந்துகொள்ள நாடகம் நடத்தினார்.

அந்த நாடகத்தின் போது துளசிக்கு சமைக்கத்தெரியாமல் பெருமாளுக்கு உப்பில்லாமல் சமைத்து கொடுத்தார் அதை சுவைத்த பெருமாள்“இன்று முதல் என் மனைவி துளசிக்காக  உணவில் நான் உப்பை விலக்கி கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பிரசாதமாக உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்.” என்று அருளினார் ஸ்ரீஒப்பிலியப்ப பெருமாள்.

துளசிதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்ற பெயர் வந்தது. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

இங்கு கொடுக்கும் பிரசாதமான துளசியையும்,துளசி நீரையும் நம்பிக்கையுடன் பருகினால் அனைத்து வயிற்று பிரச்சினைகளும் கண்டிப்பாக தீரும்.அதேபோல் உப்பில்லாத பிரசாதம் ஒரு அருமருந்தாகும்.மேலும் இங்குள்ள ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வில் அனைத்து தடைகளும் விலகி எப்போதும் நமக்கு இன்பமான வாழ்வு அமையும்.