ஆடி கிருத்திகை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்!

aadi-kiruthigai-poojai-palangal
ஆடி கிருத்திகை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்!

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெரு மானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.முருகப் பெருமானை, அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.

மந்திரம்:
“ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்|”

இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருக னுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவி லில் 9 முறை பிரதிட்சணம் வர வேண்டும்.  இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், அந்த முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்து . யோகங்களையும்  பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.
கிருத்திகையில் மட்டும் நட்சத்தி ரங்கள் தாராளமாக இருப்ப தால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச  பரம்பரையினர் களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடிகிருத்திகை  தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்: 

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெரு மானை வழிபடுபவர்கள் நிறை வான அறிவு, நிலையான செல் வம், நீண்ட ஆயுள், அன்பும் பண் பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறு களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

மேலும், இரவில் நித்திரை செய் யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத் தன்று காலையில் மீண்டும்  நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்க ளுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங் கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண் டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபய கரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்க ளும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரம ளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்ற வையும் இருக்கும்.

கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினந்தோறும் அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

முருகப்பெருமானை வணங்க சஷ்டி திதி, விசாக நட்சத்திரம், கார்த்திகை மாதம், திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்தவை.

முருகன் கங்கையால் தாங்கப்பட் டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்க ளால் வளர்க்கப்பட்டதால் கார்த் திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டார்.

அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமர னுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனை களிலும் பங்கு கொண்டு முருக னின் அருளை பெறுவோம்