வெற்றிகள் தரும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்

hanuman-slogam
வெற்றிகள் தரும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்

●யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் 
பொருள் : எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ, அங்கங்கு சிரமேற் கை குவித்து,
ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான, மாருதி யை வணங்குங்கள்.

●மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி..
பொருள் :  மனதை விட வேகமானவரும்,
புலன்களை அடக்கியவரும், புத்திமான்களில் சிறந்தவரும், வானரர்களில் முக்கியமானவ ரும், வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன்.

●புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
பொருள் : ஹனுமானை நினைப்பதால் புத்தி யும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும்.

ஜெய் ஸ்ரீ ராம்