நோயும் வழிபாட்டு பரிகாரங்களும்!

poojai-parikaram-disease
நோயும் வழிபாட்டு பரிகாரங்களும்!

 

1. நம்முள் உறையும் ஆன்மாவை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தாக வேண்டும். இதற்கு சித்தர்கள் கூறும் எளிய வழி  தினமும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தன்னுடைய இதயத் துடிப்போடு உறவாட வேண்டும். 

இதயத்துடன் உறவாடி உன்னத நிலை அடைந்த சிவனடியாரே நந்தனார் ஆவார். நந்தனார் மூர்த்தி முன் பச்சரிசி மாக்கோலம் இட்டு வணங்கி வந்தால் இருதயக் கோளாறுகள் அகலும்.

2. சந்தேகம் காரணமாக கணவன், மனைவியரிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவதுண்டு. 

இத்தகைய தகராறுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை பெருக வழி செய்வதே திருஅண்ணாமலையில் நாம் பெறும் ’அம்மையப்ப தரிசனம்’ ஆகும். 
சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது திருவண்ணாமலையையும் பர்வதமலையையும் ஒரு சேர தரிசனம் செய்வதே கணவன் மனைவியரை ஒன்று சேர்க்கும் ’அம்மையப்ப தரிசனம்’. மிகவும் சக்தி வாய்ந்த தரிசனம்.

3. இரவில் அமைதியான ஆழ்ந்த தூக்கம் பெற விரும்புவோர் அன்னை அரவிந்த மாதாவின் உருவத்தைச் சில நிமிடங்கள் தியானித்து பின் படுக்கைக்குச் சென்றால் நிம்மதியான உறக்கம் கிட்டும்.

4. சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்

5. சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.