சனியின் தாக்கத்தைக் குறைக்கும் ஸ்ரீ சரபேச வழிபாடு!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் அமைந்திருப்பது அருள்மிகு காமாட்சி சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயம் ஆகும்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசரபேஸ்வரருடம் ஸ்ரீசனிபகவான் அருள்பாலித்து வருகிறார்.
இங்கே ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9 முதல் 10.30 மணி வரையிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீசரபேஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் வலம் வரவேண்டும். எட்டு முறை வலம் வரவேண்டும்.
அப்படி வலம் வரும் போது பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரரின் காயத்ரி மந்திரத்தை எட்டின் மடங்குகளில் ஜபிக்க வேண்டும்;
ஓம் தத்புருஷாய வித்மஹே
துரிதசகாய சரணாகத தேவாய தீமஹி
தந்நோ துரிதசகாய சரணாகத சரபேஸ்வர ப்ரசோதயாத்
என்பதே அந்த மந்திரம்!
இப்படிச் செய்து வருவதன் மூலமாக அஷ்டமத்துச் சனியால், கண்டச் சனியால், வாக்கு (பாத) சனியால், ஜன்மச் சனியால், விரையச் சனியால், அர்த்தாஷ்டமச் சனியால் அவதிக்குள்ளாகி வரும் இராசிக்காரர்கள் நிம்மதியடைவார்கள்.
கூடவே, ஸ்ரீசரபேஸ்வரரின் அருட்ப்பார்வையும் படுவேகமாகக் கிட்டும்.
அசைவம்,மது இவைகளைக் கைவிட்டவர்களுக்கே இந்த வழிபாட்டுமுறை பலன் தரும் என்பதை இக்கணத்தில் மறவாதீர்கள்;