சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பலன்கள்!
திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின்_பயன்களும் என்ன?
1.கந்த தைலம் - இன்பம்
2.மாப்பொடி - கடன் நீக்கம்
3.மஞ்சட்பொடி - அரசவசியம்
4.நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5.திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6.ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7.பழபஞ்சாமிர்தம் - முக்தி
8.பால் - ஆயுள் விருத்தி
9.பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10.இளவெந்நீர் - முக்தி
11.தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12.இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13.சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14.கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15.தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16.எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17.நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18.கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19.மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20.அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21.வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22.தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23.பன்னீர் - குளிர்ச்சி தரும்
24.விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25.தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26.ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27.சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28.கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29.ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30.புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31.பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32.குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33.தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34.சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35.ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கல் குளிர அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறுங்கள்.