குரு பார்வை கோடி நன்மையா?

guru-parvai-kodi-nanmai
குரு பார்வை கோடி நன்மையா?

''குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹகுரு சாக்ஷõத் பரப்பிரம்மாதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

குரு பார்க்க கோடி நன்மை:
மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை.
பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை.
அறிவிலே மேம்பட்டவர்.

தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர்.
பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள்.

பிரகஸ்பதி, காசியில் பல காலம் பரமட்டமா சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார்.
இவருக்கு எம கண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு.

நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார்.
மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர்.

மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர்.

யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர்.

ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள்.

குரு சன்னதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம்.

லக்னாதிபதி குருவாக இருப்பவர்கள் நல்ல செல்வம், நீண்ட ஆயுள், நல்ல கல்வி, மற்றும் நல்ல அறிவு பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். குரு பகவான் லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் நல்ல உயரங்களை அடைவார் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
லக்னாதிபதி குருவாக இருக்கும் போது கிடைக்கும் பலன்கள்:

நல்ல செல்வம்:

குரு பகவான் ஒரு ஜாதகத்தில் செல்வம், பொருள், மற்றும் நல்ல வாழ்க்கை தரக்கூடிய ஒரு கோள். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் நல்ல செல்வம், பணம், பொருள் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.

நீண்ட ஆயுள்:

குரு பகவான் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம், மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கும். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்.

நல்ல கல்வி, அறிவு:

குரு பகவான் கல்வி, அறிவு, மற்றும் ஞானத்தை கொடுக்கும் ஒரு கோள். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் நல்ல கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.

நல்ல வாழ்க்கை துணை:

குரு பகவான் வாழ்க்கைத் துணைக்கு தேவையான நல்ல குணங்களை கொடுக்கும். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் நல்ல வாழ்க்கை துணையுடன் நல்ல வாழ்க்கையை வாழ்வார்.

லக்னாதிபதி குருவாக இருந்தால் கிடைக்கும் பலன்கள்:

சாதகமான பலன்கள்:

குரு பகவான் நல்ல பலன்களை கொடுக்கும் ஒரு கோள். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் சாதகமான பலன்களை பெறுவார்.

அனுபவங்களை பெறுதல்:

குரு பகவான் அனுபவங்களை கொடுக்கும் ஒரு கோள். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்.

நல்ல வாழ்க்கையை வாழ்வது:

குரு பகவான் நல்ல வாழ்க்கையை வாழ தேவையான பலன்களை கொடுக்கும். லக்னாதிபதி குருவாக இருந்தால், அந்த ஜாதகக்காரர் நல்ல வாழ்க்கையை வாழ்வார்.

குரு பகவான் மூல மந்திரம் :
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!
குரு வியாழ பகவான் காயத்ரி :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்

இடபக்கொடியைக் கொண்டவனே, தடங்கல்களையும் தடைகளையும் தகர்ப்பவனே. ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசனே. கிரக தோஷமின்றி எங்களை வாழவைத்து அருளுவாய் என்பது இதன் பொருள்.

குரு பகவான் - தட்சிணாமூர்த்தி வேறுபாடு
நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. . நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

குருபகவானின் முக்கிய ஸ்தலங்கள்.
1. திட்டை:- தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் திட்டை என் ற திருத்தலம் இருக்கிறது. தென்குடித் திட்டை என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவன் பெயர் 'உலக நாயகி உடனுறை வசிஸ்டேஷ்வரர்’. இத்தலத்தில் குருபகவானுக்காகத் தனிச் சன்னிதி இருப்பது தனிச் சிறப்பு. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி மீது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தானாகவே ஒரு சொட்டு நீர் விழுந்துகொண்டிருப்பது தனிச் சிறப்பு. மேல்தளத்தில் சந்திரகாந்தக்கல் அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.

2. திருச்செந்தூர்:- முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது.

3. ஓமாம்புலியூர்:- சிதம்பரத்துக்கு தென்மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உல்ளது. இறைவன் பெயர்’ துயர் தீர்த்த நாதர்’. இறைவி பெயர் பூங்கொடி நாயகி. இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய தலம் இது. இத் தலத்திற்கு ‘பிரணவ வியாக்கியான புரம்’ என்ற பெயரும் உண்டு. புலி ஒன்றுக்கு அஞ்சிய வேடன் வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துப்போட, கீழே இருந்த சிவலிங்கத்தின்மீது வில்வ இலைகள் வி ழுந்துகொண்டிருந்ததால், அவனுக்கு சிவனருள் கிட்டிய தலம் இது. இங்கு தட்சிணாமுர்த்திஉயர்ந்த பீடத்தில் காணப்படுகிறார்.

4. திருலோக்கி:- தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும் பாதையில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காளையின்மீது இறைவனும் இறைவியும் வீற்றிருக்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அற்புதச் சிற்பம் அமைந்துள்ள திருத்தலம் இது. இறைவனை வழிபட்ட குருபகவானை இங்கு வழிபட ஏற்றம் பல பெறலாம்.

5. ஆலங்குடி:- கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இறைவன் ஆலகால விஷம் உண்டதால், ஆலங்குடி எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு கோவில் கொண்டிருக்கும் ஈசன் பெயர்’ ஆபத்சகாயேஸ்வரர்’, அம்மன் பெயர்’ ஏலவார் குழலி’. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத் தலத்தில்தான் தேவி தவம் செய்து இறைவனை மணந்துகொண்டார். தேவி திருமணம் செய்துகொண்ட இடம் இப்போதும் ’திருமண மங்கலம்’ என்று அழைக்கப்படுகின்றது.

கஜமுகாசுரனால், தேவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளைக் களைந்து காத்தமையால், இத்தல விநாயகர் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஆதிசங்கரர் குருபகவானிடம் மகாவாக்கிய உபதேசமும், 64 கலைகள் பற்றிய ஞானமும் பெற்றதாக வரலாறு. ‘ சாயரட்சை’ என்கிற மாலை நேரத்தில் இத்தலத்து இறைவனை வழிபடுவது சிறப்பு. குருபகவானுக்குரிய விஷேஷத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து , 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.

6. மயிலாடுதுறை:-இத் தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

7. தேவூர்:- திருத்துறைப்பூண்டியில் இருந்து கீவளூர் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இத் தலத்து இறைவனுக்கு தேவகுருநாதன் என்றுபெயர். குருபகவான் வழிபட்ட தலம் இது. இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு தனி சன்னிதி இருக்கிறது.

8. கும்பகோணம்:- கும்பகோணத்தில், மகா மகக்குளமானபொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில்இதுவும் ஒன்று. இங்குள்ள இறைவனை காசி விஸ்வநாதர் என்றும், காசி விசாலாட்சி, தேனார் மொழிஎன்றும் அழைக்கிறார்கள்.
"குருவே சரணம்"