மே 7, 2025 - மோகினி ஏகாதசி இதை செய்தால்?
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
மே மாதம் 8ம் தேதி வியாழக்கிழமை, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசி யாக கொண்டாடுவர். மோகினி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத் துவத்தை விளக்கும் வரூதினி ஏகாதசி விரத கதையை கேட்ட தனுர்தாரி அர்ஜூ னன் பரமாத்மா கிருஷ்ணரிடம்,
"கிருஷ்ணா.. சித்திரை/வைகாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றை பற்றி விரிவாக கூற வேண்டும்" என்று வேண்டினான்.
கிருஷ்ணர் பதிலளிக்கையில், "பாண்டு நந்தனா, மகரிஷி வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு கூறிய ஒரு புராதன கதையை உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.
ஒரு சமயம் ஸ்ரீ ராமர் மகரிஷி வசிஷ்டரி டம், " குரு தேவா, ஜனகநந்தினி சீதையின் பிரிவா ல் நான் மிகுந்ததுயரத்தை அனுபவிக்கிறேன் சொல்ல வொண்ணா மன வேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை நீக்குவது எப்படி? அனைத்து பாபங்க ளையும், துக்கங்களையும் அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும் அளிக் கக்கூடிய விரதம் ஏதாவது உண்டென்றால் அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்." என்றார்.
மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ர தன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறி வாற்றலை கொண்டவன். உன் நாமத்தை ஸ்மரணம் (உச்சரித்த) செய்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தை பெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு கேள்வி யை கேட்டுள்ளாய். .."
"உனக்கு ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத் தை கூறுகிறேன். வைகாசி மாதம் சுக்லபட்ச த்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல பாபங்க ளும், துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னு ம் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர்.
"ஸ்ரீ ராமா.. துக்கத்தால் வாழ்க்கையில் துன்ப ப்படும் அனைவரும் இவ் மோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது அவசிய மானதும். இவ் விரதத்தை மேற்கொள்வதால் ஒருவரது பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறு கிறது. இந்த மோகினி ஏகாதசி விரத மஹாத் மிய கதையை கூறுகிறேன். கவனத்துடன் கேள்."
சரஸ்வதி நதியின் கரையில் பத்ராவதி என்னு ம் பெயர் கொண்ட நகரம் அமைந்தி ருந்தது. அந்நகரை த்யூதிமான் என்ற பெயர் கொண்ட அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நகரில் வற்றாத தனம், தான் ய சம்பத்துக்களுடன் தனபால் என்னும் பெயர் கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான்..
பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்ம சிந்தனையுடன் நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடி நீர் பந்தல், குளம், குட்டை, தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான். பாத யாத்ரி கர்களின் நன்மைக்காக சாலையின் இருமரு ங்கிலும் மாமரம், நாவல்கனி மரம், வேப்பமர ம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்..
வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்த னர். அவர்களில் மூத்தவன் கொடிய பாப வினைக ளை புரியும் பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன் துஷ்டர்களு டனும், வேசிக ளுடனும் நட்பு கொண்டு நே ரத்தை வீணாக கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செலவழித்தான்..
அவன் நீசனாகவும், தெய்வம், பித்ருக்கள் என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லா மல் வீணாக தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதி ரியான கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம், புலால் உண்பது அவனுடைய தினசரி வாடிக்கையாக இருந்தது.
அநேக முறை அறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே செய்து கொண்டிருந்தா ன். அவனது செய்கையால் துக்கத்தில் வாடி ய வியாபாரி தனபால், அவனது சகோதரர்க ள், குடும்பத்தினர் அனைவரும் அவனை கடும் சொற்களால் நிந்தனை செய்து, வீட்டை விட்டு வெளியேற்றினர்.
வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்தி ருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங் களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்து போனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர் களும், வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.
பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை தாளாமல் திருடுவது என்னும் முடிவுக்கு வந் தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும், களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன் என்று அறிந்த தும், அவனை தண்டியாமல் திருந்தி வாழுமா று அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் அகப்பட்ட போ து, அவன் பேச்சை கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனி ன் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.
அரசன் அவனை சிறையில் அடைக்க உத்தர விட்டான். சிறையில் அவன் தண்ட னையாக சித்திரவதையை அனுபவித்தான். பிறகு அவ னை அந்நகரை விட்டும் வெளியேற்றினர்.
மிகுந்த மனவருத்தத்துடன் நகரை விட்டு வெளி யேறி காட்டில் வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளை கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான்.
நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு வேடுவனாக மாறி விட்டான். வில் அம்புக ளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிக ளை தன் பசிக்காக மட்டும் அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான்.
ஒரு நாள் வேட்டையில் ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும், தாகமும் வருத்தி எடுக்க, உணவைத் தேடி அலைந்து அலைந்து கடைசியில் கௌடின்ய முனிவரி ன் ஆசிர மத்தை அடைந்தான்.
அப்போது சித்திரை மாதம் நடந்து கொண் டிருந்தது. கௌடின்ய முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து விழுந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திர த்தில், பாபியான அவனுக்கு நற்சிந்தனையு ம், நல்லெண்ணமும் உருவாகியது.
அவன் முனிவரின் அருகில் சென்று இரு கரம் கூப்பி கண்ணில் நீர்மல்க, "முனி சிரேஷ்டரே.. நான் என் வாழ்க்கையில் மன்னிக்க முடியாத அளவு பாபம் புரிந்துள் ளேன். என் பாபவினை களிலிருந்து நான் முக்தி பெறுவதற்கு ஏதாவ து எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு வழியை கூறி அருள வேண்டும்." என்றான்.
முனிவர் அதற்கு," நான் சொல்வதை கவனத் துடன் கேள். வைகாசி மாதம் சுக்லப ட்சத்தில் வரும் ஏகாதசி, மோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அவ் மோகினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடை ப்பிடித்தால் உன்பாபங்கள் எல்லாம் நீங்கி, புது வாழ்வு பெறுவாய்.." என்று அருளினார்.
முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான். முனிவர் கூறி ய ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தான்.
"ஸ்ரீராமா அந்த மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனது அனைத்து பாபவி னைகளும் அகன்று நல்வாழ்க்கை பெற்றான். இறுதியில் விரதத்தின் புண் ணியபலனால், கருட வாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தியும் பெற்றான்.
இவ்விரதத்தினால் மோகம் என்னும் மாயை அகன்று, மனிதர் முக்தியை பெறு கிறார். இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரத மஹாத்மிய கதையை கேட்பவரும், படிப்பவரு ம், ஒராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணி யத்திற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.
கதாசாரம்
மனிதர்கள் எப்போதும் நற்சிந்தனையுள்ள சான்றோர், சாதுக்கள் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தல் வேண்டும். நற்சிந்தனை யுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல் அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை லட்சிய த்தையும் அடைவதற்கும் உதவும். கெட்ட சகவாசம் அதனால் விளையும் பாபவினை கள் ஒருவரை நரகத்திற்கு மட்டுமே இழுத் துச் செல்லும்.
அத்தகைய நட்பு துன்பம் வரும் காலங்களி ல் கைவிட்டு விலகி விடுவதால், அனாதை யாக தவிக்க நேரிடுகிறது. அப்போதும் கௌடின்ய ரிஷி போன்ற சாது, சான்றோ ர்கள் ஒருவரை கைவிடாமல் நன்மார்க்க த்தைக் கூறி அருளுவர்.