ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருப்பூர்
அருள்மிகு ஸ்ரீ வள்ளி,தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
இறைவன் :
சுப்ரமணிய சுவாமி.
உற்சவர் : சிவாஜலபதி.
இறைவி: வள்ளி, தெய்வானை.
தல விருட்சம் :
தொரட்டி மரம்.
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.
திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
திருப்பூர் மாவட்டம் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.
பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.
சிவன்மலை
காங்கேயம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்.