செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி - சீனா அதிரடி தீர்ப்பு.
சனிபகவான் பீடை விலக "பத்மபுராணம்"?
தசரதனின் சனிபகவானைக் குறித்த ஸ்தோத்திரம்
நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...!!!
இதன் பொருள் விளக்கம் : --
கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவம் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன்.
மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் .
புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.
சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.
சனிபகவானே,தேவர்,அசுரர்,மனிதர்,ஆயினும், சித்தர்,வித்யாதரர்,உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.
உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
மஹா பகவானும் ,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக ,
"ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது .உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , " செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .
அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் .ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.
உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன் .
கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்.
தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.
இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.
சனிபகவானே போற்றி போற்றி போற்றி ..