உமா மஹேஸ்வரர் திருக்கோவில், திருநல்லம், கோனேரி ராஜபுரம்
சிவஸ்தலம் பெயர் திருநல்லம் (தற்போது கோனேரி ராஜபுரம் என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர் உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவி பெயர் மங்கள நாயகி, அங்கவள நாயகி
பதிகம் திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோவில் விபரம்: முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோவிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது. அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது.
பிரசித்தி பெற்ற திருநல்லம் நடராஜர்
இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார். இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.
ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும். இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
தவழும் நதியை தரித்த முடியான்| அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியார் ஒதும் வேத நாதம் ஆஹி.....
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
வரிப்புலி அதை தரித்தவன் எழில் கண்டேன்
பிரப்பெணும் பினி அறுப்பவன் துனை கொண்டேன்
தமிழ் கவி தரும் எனக்கொரு வரம்| தர திரு உளம் வேன்டும்
ஸகத் திருக்கெனை தரத் தஹும் நெறி |வகுத்திட துனை வேன்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்.
அண்டும் திரு தொண்டன் யெனும், அடியார்கு ஒரு தொண்டன்.
பற் று தலைக்கு நெருப்பவன்| ஒற் றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து....
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ |எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
தொடக்கமும் அதந் அடக்கமும் அவன் வஎலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லேலை
உடுக்களில் ஸரம் தொடுத்தவன் தலை |முடிக்க நியாவும் கோடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை | கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தொறும் அவன் கணக்கின் படி ஆகும்
மண் ணும் உயர் விண் ணும் அவன் ஒரு கை பிடி ஆகும்
சட்டம் அணைத்தும் வகுத்தவன் |திட்டம் அணைத்தும் தொகுத்தவன்
ஒற் றப்படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரொ|எனக்குள் அவன் இருப்பான் அறிவாறொ||
ஓம் நமச்சிவாயா
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் |ஆறு காலங்களும் ஆடைகளாகும்
மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க| ஏழு அடிகளும் சலங்கை படிக்க
ராகம் பார்வையே எட்டுதிசைகளே |உன் சொற்களே நவரசங்களே
கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
மூன்று காலங்களும் உந்தன் விழிகள் |சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்
கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்| இறைவா உன்னடி பெறவே துடிக்கும்
அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ| நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (*2)
நாத வினோதங்கள்
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு பெறுமே
ராகங்களே...அ அ அ அ ஆ...பழகுவதே...அ அ அ அ ஆ...
ராகங்களே பழ்குவதே பாவங்களே கலையசைவே
குழலொடு உயர்வுகள் இணைகின்ற தவமிது
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச | ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம் | அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ | பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன | திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன | திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம் | அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம் | நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே