வெற்றியை தரும் கிருஷ்ண மந்திரங்கள்

krishna-mantras-palangal
வெற்றியை தரும் கிருஷ்ண மந்திரங்கள்

விளையாட்டு தனமானவர் என சாதாரணமாக நினைத்து விடுவதால் கிருஷ்ணரை பலரும் வணங்குவதில்லை. ஆனால் குழந்தை தனமான மனம் கொண்ட கிருஷ்ணரை உண்மையான அன்புடன் வழிபட்டால், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிருஷ்ணர் வீடு தேடி வருவார் என்பது பலருக்கும் தெரியாது.

கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் எந்த குறையும் இல்லாமல் நிறைவு மட்டுமே இருக்கும் என்பதற்கு குசேலரின் கதையே உதாரணம்.

அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று அனைவரும் ஆசையாக, விருப்பமுடன் வீடு முழுவதும் குழந்தை கிருஷ்ணரின் பாத தடங்களை வரைந்து கிருஷ்ணரை வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமாக விளங்குவது கிருஷ்ண அவதாரம்.

தசாவதாரங்களில் மிகவும் தனித்துவமான அவதாரம் இதுவாகும்.

திருமாலின் மற்ற அவதாரங்கள் அனைத்தும் உலகை காப்பதற்காக, தீமைகளை அழிப்பதற்காகவும் எடுக்கப்பட்டதாகும்.
ஆனால் கிருஷ்ண அவதாரம் என்பது உலகிற்கு தர்மத்தை, நீதியை, பக்தியை போதிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும்.

இந்த அவதாரத்தில் மட்டுமே பகவான் கிருஷ்ணர், அனைத்து காலத்திற்கும் பொருந்தும் வகையிலான பகவத் கீதையை போதித்துள்ளார்.

உலகில் உள்ள ஒட்டு மொத்த தீயவர்களையும் அழித்து, உலகை சுத்தம் செய்வதற்காக எடுத்த அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

இதைத் தொடர்ந்து கலியுகத்தில் மேலும் அதிகரித்த தீயவர்களை அழித்து, மீண்டும் சத்திய யுகத்தை நிறுவ கலியுகத்தின் முடிவில் கல்கியாகவும் திருமால் அவதாரம் எடுக்க உள்ளார்.
அதனால் எப்படிப்பட்ட துன்பம், கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.

கிருஷ்ணருக்குரிய முக்கியமான 5 மந்திரங்களை சொல்லி வருவதால் வெற்றி, செல்வ வளம் தொழில், இறையருள், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவ ஆகியவை வளர்ந்து கொண்டே செல்லும்.