7ம் இடத்தில் சனி பகவான் இருந்தால் இல்லற வாழ்க்கை?
7 -ம் வீட்டில் சனி இருப்பது பெரும்பாலும் நல்ல அமைப்பு இல்லை எனச் சொல்லலாம். அந்தந்த லக்னத்தைப் பொறுத்த பலன்கள் சாதக பாதகமாக அமையும். அதே நேரத்தில் சனி பகவானுக்கு இந்த ஏழாம் இடம். அதிக பலத்தைத் தரும். காரணம் ஏழில் சனி திக்பலம் ..
பாவ கிரகம் எந்த நிலையிலும் எழில் திக்பலம் அடைவது ஒரு சிறப்பான அமைப்பு அல்ல ..
பெண்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் திருமணத்தில் தடைகள், தாமதங்கள், குழப்பங்கள் இருக்கும். வயோதிகமான தோற்றம் இருக்கும். இரண்டாம் தாரமாக செல்லக் கூடிய அமைப்பு உண்டு. எந்த முடிவுகள் எடுப்பதிலும் குழப்பம் அடைவார்கள் அடிக்கடி எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.