குலம் செழிக்கும் குலதெய்வம் ஏன்?

kula-deivam-poojai-and-remedy
குலம் செழிக்கும் குலதெய்வம் ஏன்?

குலதெய்வம் என்பது நமது குலத்தை வாழையடி வாழையாக காக்கும் கண் கண்ட தெய்வம்.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை குல தெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை மிக பிரமாண்டமாக சொந்த பந்தங்கள் அனைவரும் பிரம்மிக்க ஆரவாரமாக அபிஷேகம் ஆராதனை சாப்பாடு செய்வது என்று பாரம்பரியமாக இருந்து வந்தது.

ஆனால் இப்போதைய தலைமுறைக்கு
குல தெய்வமா அப்படீன்னா என்னங்க என்று சிம்பிளாக கேள்வி கேட்கிறார்கள்
அது முற்றிலும் தவறு !!

எத்தனை தெய்வங்களை நீங்கள் கும்பிட்டாலும் அந்த தெய்வங்கள் உங்களுடைய குல தெய்வத்தினை தான் நாடும்.

சரி குல தெய்வத்தை பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேளுங்கள்
கண்டிப்பாக அவர்கள் கூறுவார்கள்.

சரி குல தெய்வத்தை பற்றி பார்ப்போம்.

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

2). குருவை மறந்தாலும் குலதெய்வத் தை மறக்ககூடாது.
3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.
4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஆசார்யர்களின் வாக்கு.
4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.
5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உன்னதமான தெய்வமே குலதெய்வம் தான்.