நடை உடை பாவனையில் ஸ்டைல்; பிரபலங்கள் பட்டியல் வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்.
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில்
போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்:
#போகர் சித்தருக்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் - மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும்..
சிவபோக சக்கரம்:
போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார்.
பிறகு அதில் சரியான திதியும், நட்சத்திரமும், ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்.
அதன் விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின. இதை அறிந்த பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர். ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!
வெள்ளூர் திருக்காமேஸ்வரபெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம். மேலும், அகத்தியர் நாடியிலும், வசிஷ்டர் நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.