விளக்கேற்றும் திரியை என்ன செய்வது?
• தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைத்து வாருங்கள்.
• கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வையுங்கள்.
• இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்கச் செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளைத் தூபக் காலில் போட்டுக் கொள்ளுங்கள்.
• பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.
• திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள்.
திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கை படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கில் ஓட விட்டு விடுங்கள்.
• திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை கிடைக்கும்.