ராகுகேது தோஷங்களை போக்கும் நாச்சியார் கோவில்!

ragu-kethu-parikaram-natchiyar-temple
ராகுகேது தோஷங்களை போக்கும் நாச்சியார் கோவில்!

அணைத்து ராகு கேது தோஷங்களையும் போக்கும் நாச்சியார் கோவில் கல் கருடர் ஓம் கருட பகவானே போற்றி!

அணைத்து ராகு கேது தோஷங்களையும் போக்கும் நாச்சியார் கோவில் கல் கருடர் ஒரு முறை கருடரை நேரில் சென்று வணங்கி வர அணைத்து ராகு கேது தோஷங்கள் நீங்கும்
எழு வகையான சர்பங்களை தன உடம்பில் வைத்து காரணத்தால் கருடரை நேரில் சென்று வணங்கினால் அணைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் வருடத்தில் இரு முறை நடைபெறுகின்றது,

மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.

நாச்சியார் கோவில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இக்கோவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோவில் ஆகும்.

இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.

நாச்சியார்கோயில் செங்கண்ணன் என்னும் சோழ மன்னனால் கட்டப்பட்டதென நம்பப்படுகிறது. இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும்.

நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் .

முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.

ராகு கேது தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை நீங்க 22 நாட்கள் தொடர்ந்து கருடனுக்கு விளக்கேற்றிவர தடைகள் நீங்கும். ராகு கேதுவால் ஏற்படும் தோஷம் நீங்க முதலில் கருடனை வழிபட்டு தைரியம் பெற்று கொள்ளலாம்.

நிரந்தர நிம்மதி தருவதில் கருடனுக்கு இணை கருடனே, எனவே தோஷம் நீங்க, பிரார்த்தனை செய்ய உகந்த நாள் கருட பஞ்சமி நாள்.