சங்கரனோட பொழப்பு மதுரைல அரசரடிக்குப்பக்கத்துல எஸ் எஸ்,காலணில இருக்குற ஒரு பிள்ளையார்கோவில நம்பித்தான் இருந்துச்சு. அது கொஞ்சம் வசதியானவுக இருக்குற ஏரியா. மெயின் ரோட்டுமேல இருக்குற அரசமரத்தடி பிள்ளையார்கோவில் பிரசித்தம்.
அந்தவழியா ஆபீஸ் போறவுக பள்ளிக்கொடம் போறவுக தொழிலுக்குப்போறவுக எல்லாம் நின்னு கும்புட்டுட்டு போவாக. வெள்ளி செவ்வாய் சங்கடகரச்தூர்த்தி ஞாயத்துக் கெழமைகளில் ஓரளவு தட்டுல வருமானம் வரும். அத நம்பித்தான் பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு. விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்கள்போது நல்ல வருமானம் இருக்கும். வெள்ளி செவ்வாய் சாயங்காலம் பக்தர்கள் வருவாங்க பூஜைக்குக் குடுப்பாங்க. அபிசேகம் சிறப்பு பூஜைன்னு வயத்தை கழுவ விநாயகர் வழிபண்ணிக்கிட்டு இருந்தாரு . அவரோட சம்சாரம் .அவருகேத்தமாதிரி பொழப்புநடத்துவா. தேங்கா கொண்டாந்தா தேங்காச்சட்டிணி பழம் கொண்டாந்தா இரவு சாப்பாடு அதுமட்டும் தான்.பொங்கல் கொண்டாந்தா அதுதான் சாப்பாடு இப்புடித்தான் கைக்குள்ள குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருந்தா.
இந்த லாக்டவுன் அவரப்[பெருசாகஸ்ட்டப் படுத்திருச்சு. கோவில் தொறக்க முடியல அதுனால பூஜை இல்ல வருமானம் இல்ல பிள்ளையாரே காத்தக்குடிச்சி காஞ்சுபோயிருந்தாரு. அபிசேகம் எதுவுமில்ல . ஆனா இவரு மாத்திரம் கோவிலுக்குத்தெனம் போவாரு சின்னதா ஒரு பூஜை பண்ணிட்டு அஙகயே இருப்பாரு இவரத்தெரிஞ்சவங்க ஏதாவது குடுப்பாங்க சிலர் தட்டுல சாமி கும்புட்டுட்டு காசுபோட்டுட்டுபோவாங்க ..அது பெருசா ஒண்ணுமில்ல. சிரமமாத்தான் போய்ட்டு இருந்துச்சு. அவரு சம்சாரம் சொன்னாங்க சின்னதா அங்கயே ஒரு கடைய போடலாமுன்னு. அதுக்கு அவர் கோவிச்சிட்டார், அது கோவில் அங்க வியாபாரம் பண்ணக்கூடாதுன்னு கறாராச்சொல்லிட்டார்.
அன்னிக்கித்திங்கக்கெழம கோவில் வாசல்ல ஒக்காந்த்திருந்தார். காலையில் இருந்து சோதனைக்குனாலும் யாரும் வரல தட்டு விபூதியோடவே இருந்துச்சு. ஒண்ணும் தேறல ஒரு பதினோரு மணிக்கு வீட்டப்பாத்து கெளம்புனார். நடந்து போறதுதான் வழக்கம். நல்ல நெற்றியிலயும் ஒடம்புலயும் பூசிருந்த விபூதி வெயில்ல வேர்வையில கரைஞ்சி ஓடுச்சு அரசரடி கிட்ட வந்துக்கிட்டு இருந்தாரு. காளவாசல் பகுதில , மசூதி எல்லாம் இருக்கு அன்னிக்கி ரம்ஜான் போல முஸ்லீம் ஜனங்க போறதும் வாரதுமா இருந்தாங்க.அப்ப ரோட்டுக்கு அந்தபுறம் ஒரு வேன் வந்து நின்னுச்சுஅதுல இருந்து
ஒரு பெரியவர் எறங்குனாரு அந்த வேன்ல அட்டப்பொட்டிகள் நெறைய இருந்துச்சு
இவரு ரோட்டோரமா போய்க்கிட்டு இருக்குறப்ப ஒரு சின்னப்பையன் ஒரு அட்டப்பொட்டியக்கொண்டாந்து இவர்கிட்டக் குடுத்தான் அவன். குல்லா போட்டிருந்தான் கவனிச்சிப்பாத்தா அந்தவேன்ல இருந்து பெரியவர் அவரும்
குல்லாபோட்டிருந்தாரு.அட்டப்பெட்டிகளை எடுத்துவைச்சிக்குடுத்துட்டு இருந்தாரு பின்னாடி திரும்பிப்பாத்தாரு . ரோட்டோரமா ஒரு முஸ்லீம் பெரியவரு ஒக்காந்திருந்தாரு. இவரு புரிஞ்சிக்கிட்டாரு அவருக்கிட்ட குடுக்கச்சொன்னதத்தான் சின்னப்பையன் வெவரம் தெரியாம நம்மகிட்டக்குடுக்குறான்னு. அவன்கிட்டக்கேட்டார் என்ன இதுன்னு அவன் சொன்னான் ரம்சான் பரிசுன்னு அப்படியா இது அந்தா ரோட்டோரத்துல ஒக்கந்துருக்காரே முஸ்லீம் பெரியவர் அவருக்குகுடுக்கச்சொல்லிருப்பாரு அந்தவேன்ல இருக்குறவரு. அவர்கிட்டக்குடுப்பான்னு அவன கூட்டிட்டுப்போய் அந்த முஸ்லீம் பெரியவர்கிட்ட விட்டார்.
அதத்தூரத்துல இருந்து பாத்துக்கிட்டிருந்த வேன்ல வந்தவரு அங்க வந்து சொன்னார் பெரியவெரே இது ஒங்களுக்குக் குடுக்கத்தான் சொல்லிவிட்டேன் . இது முழுசும் பழங்கள் தான். இன்னிக்கிப் பெருநாள் எல்லாருக்கும் தானம் கொடுக்கலாம் .இருக்குறவ்ஙக இல்லாதவங்களுக்குக்கொடுக்கனும் அதுதான் மறை சொல்லுது வாங்கிக்கங்க ந்னு சொன்னார். அந்தப்பெரியவருக்கும் தனியா இருக்கு குடுக்குறேன்னாரு.
இவருக்குத்தயக்கமா இருந்துச்சு அப்ப அவர் சொன்னார். நானும் தொடர்ந்து அந்தரோட்டுல போறப்ப ஒங்களப்பாப்பேன். பிள்ளையார் கோவில் வாசல்ல ஒங்க சோகமான மொகத்தப்பாக்குறப்ப மனசப்பெசையும் என்னா செய்ய முடியும்ன்னுயோசன பண்ணிட்டு இருந்தேன் இப்ப ஒங்களப்பாத்த்வன்ன குடுக்கனும்ன்னு தோணிச்சு மறுக்காம வாங்கிக் கங்கன்னாரு . அவரும் கண்கலங்க வாங்கிகிட்டு வணங்குனாரு
வீட்டுக்கு வந்து சம்சாரத்துக்கிட்ட விசயத்தச்சொல்லி பெட்டியக்குடுத்தாரு அவள் ஆச்சர்யப்பட்டுப்போனா. பெட்டியப்பிரிச்சிப்பாத்தப்போ உள்ள ஆப்பிள் ஆரஞ்ச் மாதுளைபழஙகளோட கொஞ்சம் பணமும் இருந்தது
அவர் நெகிழ்ந்து போயிட்டாரு. பிள்ளையாரப்பா பழத்தை வைச்சி இன்னொரு விளையாட்டா ந்னு வீட்டுல இருந்த விநாயகர் படத்தைக்கும்புட்டாரு கண்களில் நீர் வழிய.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்